ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி:ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா? பதில்: செயலால் அவர்களை எழுப்ப முடியும். பேசுவதன் மூலம் அவர்களை எழுப்பக்கூடாது. ஏனெனில் குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசுவது கூடாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய். (ஸஹீஹ் புகாரி : 934) அவர் நன்மையான ஒரு விடயத்தை ஏவக்கூடியவராக இருந்தும் அவரை நபியவர்கள் வீணான காரியத்தைச் ... Read more

ஜும்ஆ அன்று இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுகின்றனரே இது அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது “சில நாடுகளில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுவார் இது அனுமதிக்கப்பட்டதா? பதில்: இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது இப்படியான செயல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய காலத்தில் இருக்கவில்லை.நபியவர்கள் பள்ளிக்கு நுழைந்தால் மிம்பரை நாடி முஅத்தின் அதானை கூறிமுடிக்கும் வரை அதிலேயே உட்கார்ந்திருப்பார்கள் .பின்பு உரையை ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்னர் எவ்வித உபதேசத்தையும் அவர் ... Read more

சுவனத்திற்கு இறுதியாக நுழைபவரும் அல்லாஹ்வை பார்ப்பாரா?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சுவனவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கும் மிகப்பெரிய அருள் தான் அல்லாஹ்வின் மிகமகத்தான முகத்தை பார்ப்பதாகும்.அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தருவானாக! சுவனவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது பற்றி அதிகமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து யாரும் விதிவிளக்காக்கப்பட மாட்டார்கள். ஆதாரங்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்துள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின் ஓர் அழைப்பாளன் “சுவனவாசிகளே! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒன்று உள்ளது என்று கூறுவார் .அதற்கவர்கள் “அது ... Read more

அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன?

கேள்வி : சிலர் அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீது உண்டாகுவதாக. அவர்களுடைய தோழர்கள், குடும்பத்தார் அனைவரின் மீதும் உண்டாகுவதாக. அல்வலா வல்பரா என்பது தவ்ஹீதின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தைகள் குர்ஆன் சுன்னாவில் வந்திருப்பவையாகும். அல்லாஹ் தஆலா குர்ஆனில் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! ... Read more

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா?ஆதாரம் என்ன?

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா? ஆதாரம் என்ன? பதில் : பிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள். (அல்குர்ஆன் : 40:46) மிகப்பெரும் நிராகரிப்பாளரான பிர்அவ்னையும் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அவனது கூட்டத்தாரையும் பற்றி இந்த வசனம் பேசுகின்றது. பாவம் செய்த முஸ்லிம்களின் தண்டனை இதை விடக் குறைந்தளவாக இருக்கும் என்பதில் ... Read more

மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன?

கேள்வி : சிலர் மறுமையையும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றையும் மறுக்கின்றனரே இவர்களின் நிலை என்ன? பதில் : இவ்வாறு கூறுபவர் ஒரு முஸ்லிமாக மட்டுமன்றி யூத, கிறிஸ்தவராக கூட இருக்க முடியாது. (இவ்விடயத்தில்) யூத, கிறிஸ்தவர்கள் அவரை விட சிறந்தவர்கள். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பாத நாத்திகராகவே இருப்பார். அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவன் தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை மறந்துவிட்டு, “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று ... Read more

குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?

கேள்வி: குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?   பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, குர்ஆனில் ஸஜ்தாவுடைய இடங்கள் 15 ஆகும். அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் 15 ஸஜ்தா வசனங்களை ஓதினார்கள். அதில் மூன்று முஃபஸ்ஸலிலும் சூரா ஹஜ்ஜிலே இரண்டு வசனங்களும் ஆகும். இந்த செய்தி அபூதாவூத், இப்னுமாஜா,ஹாகிம்,தாரகுத்னீ இமாம் முன்திரி (ரஹ்) இமாம் நவவீ (ரஹ்) ஆகியோர் இந்த செய்தி ... Read more

ஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன?

ஸுஹுத் – زهد- என்ற அறபுப் பதத்திற்கு தமிழில் துறவறம், பற்றற்ற தன்மை மற்றும் சன்னியாசம் போன்ற அர்த்தங்களை தருகிறது. ஏழ்மையான வாழ்வை இஸ்லாம் வெறுக்கிறது. ஆனால் எளிமையான வாழ்வை இஸ்லாம் வரவேற்கின்றது. உலகை ஆளும் அரசனாலும், உலகமகா பணக்காரனாலும் எளிமையான வாழ்வு வாழ முடியும். நபிமார்கள் நல்லோர்கள் வாழ்ந்து காட்டிய அறநெறி வாழ்வும் இதுவாகும். இந்த எளிமையான வாழ்வமைப்பைத்தான் பற்றற்ற வாழ்வாக, வெற்றிக்கான வழியாக, பாதுகாப்பான மார்க்கமாக சன்மார்க்கம் அறிமுகப்படுத்துகிறது. பின்வரும் நபி போதனை அதற்கு ... Read more

தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா?

கேள்வி : தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளுமாறு நாம் ஏவப்படவில்லை என்று ஷைகுல் இஸ்லாம் அவர்கள் கூறியுள்ளார்களே? பதில் : முடிந்தவரை எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது தான் சிறந்தது. ஆனால் பிறரிடம் வேண்டிக் கொள்வதில் தடையேதும் இல்லை. வாகனத்தில் இருப்பவர் தனது கையிலிருந்து விழுந்த பொருளை வாகனத்திலிருந்து இறங்கி அவரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை (மாறாக)இன்னொருவரிடம் உதவி பெறலாம். பார்வை இழந்த ஒருவர் ... Read more

பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது?

கேள்வி : பயணம் செய்பவர் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் வாகனத்திற்குள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாமா?

பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.

ஒரு பயணி அவர் முயற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4 : 43

ஹனபிய்யாக்கள் தண்ணீர் தேடுவதில் வரையரை வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் தண்ணீர் கிடைக்காத போது தண்ணீர் அருகாமையில் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால் அவர் நானூறு அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும். அப்போது அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

ஷாபியாக்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தனக்கு தன்னைச்சுற்றி தண்ணீர் கிடைக்காது என்று உறுதி கொள்ளும் போது அவர் தண்ணீரை தேடாமல் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் போது பயமில்லாத போது அல்லது தன்னுடைய பொருள் மீது பயமில்லாத போது அல்லது தன்னோடு வந்தவர் தன்னைவிட்டு பிரிந்து விடுவார் என்ற பயமில்லாத போது அவர் அரை ஃபர்ஸக் நடக்கவேண்டும். அல்லது ஆறாயிரம் அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும்.

இதன் அடிப்படையில் ஒருவர் அவர் வாகனத்தில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் ஓட்டினரிடம் வண்டியை தொழுகைக்காக நிறுத்தச் சொல்லவேண்டும். நிறுத்தினால் தொழுது கொள்ள வேண்டும்.

நிறுத்தவில்லையெனில்..
அப்போது தொழுகையின் நேரம் முடிவதற்குள் தனது சொந்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்று நம்பினால் அவர் தொழுகையை தாமதப்படுத்தில் தனது இடத்திற்கு சென்ற பின்பு தொழுகையை நிறைவேற்றலாம்.அல்லது தனது இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பு தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்று கருதினால் வாகனத்திற்குள்ளே சக்திக்கு உட்பட்டு நிற்குதல் ருகூவு செய்தல் ஸஜ்தா செய்தல் ஆகியவற்றை செய்து தொழுது கொள்ளவேண்டும்.

அல்லாஹ்தஆலா சொல்கிறான்:

அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சகத்திக்கு மீறி சிறமப்படுத்தமாட்டான். பகரா 286.

அல்லாஹ்வை உங்கள் சக்திக்கு உட்பட்டு பயந்து கொள்ளுங்கள். தப்ôபூன் 16.

உங்கள் தந்தையரான இப்ராஹீமின் மார்க்கத்தில் உங்களுக்கு எந்த சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை. ஹஜ் 78.

நான் ஒன்றை உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் முடிந்தளவிற்கு அதை செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நூல் : புகாரி முஸ்லிம்.

சிரமம் எளிதைக் கொண்டு வரும் என உசூல் ஃபிக்ஹ் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பயணி தன்னுடைய வாகனத்தில் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரைக் கொண்டு ஒளு செய்து கொள்வார். அல்லது தன்னோடு இருக்கும் சக பயணிகளிடம் கேட்பார். அல்லது முடிந்தால் வாகனத்திலிருந்து இறங்கி தண்ணீரை தேடுவார். கிடைக்கவில்லையெனில் தயம்மும் செய்து தொழுது கொள்வார்.

அல்லாஹ் மிக அறிந்தவன். (உலமாக்களின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான செய்திகள்.)

 

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)