ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன?

கேள்வி: ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன? அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஷீஆக்கள் பல குழுக்கள்.அவர்கள் ஒரு குழு கிடையாது.அவர்கள் 22 குழுக்கள் என்று ஸிஹ்ரிஸ்தானி என்பவர் கூறியுள்ளார். அவர்கள் பல தரப்படுகின்றனர் .அவர்களில் சிலர்களின் பித்அத் அவர்களை காபிராக மாற்றும்.இன்னும் சில கூட்டத்தினர்களின் பித்அத் அவர்களை காபிராக்காது. சுருக்கமாக கூறுவதாயின் அவர்கள் அனைவரும் பித்அத் வாதிகள். இவர்களில் மிகவும் குறைந்த நிலையில் உள்ளவர்கள் ... Read more

ஏகத்துவத்தை பற்றி அறிவதற்கு வாய்ப்பு இல்லாமல் மரணிக்கும் முஸ்லீம்களின் மறுமை நிலை என்ன?

கேள்வி: ஷைக் அவர்களே! சிலர் ஏகத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்றனர். ஸூபித்துவத்தை இபாதத் என்று நினைத்து அவர்களும் ஸூபிகளாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் எழுத வாசிக்கத் தெரியாததால் ஏற்பட்ட அறியாமையாக இருக்கலாம். அல்லது மார்க்க அறிவற்ற ஸூபி ஆலிம்கள் போன்றவர்கள் அழைப்பாளர்களாக இருந்திருக்கலாம். இவ்வாறான நிலையில் மரணித்த முஸ்லிம்களின் நிலை என்ன? அழைப்புப்பணி பற்றியும், உண்மையான அழைப்புப்பணி சென்றடையாமல் மரணிக்கும் மனிதரைப் பற்றி பேசும் போது, அவர்களுக்கு பிரத்தியேகமான நடைமுறை இருக்கிறது என்று கூறினீர்கள். இது பற்றி உங்கள் ... Read more

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன? 

கேள்வி : இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று வகைப்படுத்துகிறாரே!? என்று எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கேட்கின்றார். குறிப்பாக கலாநிதி முஸ்தபா ஹில்மீ போன்ற ஸலபி அழைப்பாளர்களும் இக்கருத்தை தமது புத்தகங்களில் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தங்களது கருத்து என்ன?   பதில் : ஸூபித்துவம் என்பது எவ்வகையிலும் புகழப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அது ஸூபித்துவம். என்றாலும் குர்ஆன் ஹதீஸில் உள்ள ஒரு விடயம் ஸூபித்துவத்தில் இருந்தால் ... Read more

முஸ்லிம் அல்லாத மக்களின் ஜனாஸாவினை மதசடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்ய முடியுமா?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவதாக ஒரு காபிர் நோய்வாய்ப் பட்டால் அவரிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அவரை அழைப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்க ஒரு விடயமாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் மரணத் தருவாயில் இருக்கும்போது அவரிடம் சென்று கலிமாவை மொழியும் படி ஏவினார்கள். அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்த ... Read more

ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி:ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா? பதில்: செயலால் அவர்களை எழுப்ப முடியும். பேசுவதன் மூலம் அவர்களை எழுப்பக்கூடாது. ஏனெனில் குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசுவது கூடாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய். (ஸஹீஹ் புகாரி : 934) அவர் நன்மையான ஒரு விடயத்தை ஏவக்கூடியவராக இருந்தும் அவரை நபியவர்கள் வீணான காரியத்தைச் ... Read more

ஜும்ஆ அன்று இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுகின்றனரே இது அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது “சில நாடுகளில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுவார் இது அனுமதிக்கப்பட்டதா? பதில்: இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது இப்படியான செயல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய காலத்தில் இருக்கவில்லை.நபியவர்கள் பள்ளிக்கு நுழைந்தால் மிம்பரை நாடி முஅத்தின் அதானை கூறிமுடிக்கும் வரை அதிலேயே உட்கார்ந்திருப்பார்கள் .பின்பு உரையை ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்னர் எவ்வித உபதேசத்தையும் அவர் ... Read more

சுவனத்திற்கு இறுதியாக நுழைபவரும் அல்லாஹ்வை பார்ப்பாரா?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சுவனவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கும் மிகப்பெரிய அருள் தான் அல்லாஹ்வின் மிகமகத்தான முகத்தை பார்ப்பதாகும்.அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தருவானாக! சுவனவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது பற்றி அதிகமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து யாரும் விதிவிளக்காக்கப்பட மாட்டார்கள். ஆதாரங்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்துள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின் ஓர் அழைப்பாளன் “சுவனவாசிகளே! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒன்று உள்ளது என்று கூறுவார் .அதற்கவர்கள் “அது ... Read more

அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன?

கேள்வி : சிலர் அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீது உண்டாகுவதாக. அவர்களுடைய தோழர்கள், குடும்பத்தார் அனைவரின் மீதும் உண்டாகுவதாக. அல்வலா வல்பரா என்பது தவ்ஹீதின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தைகள் குர்ஆன் சுன்னாவில் வந்திருப்பவையாகும். அல்லாஹ் தஆலா குர்ஆனில் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! ... Read more

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா?ஆதாரம் என்ன?

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா? ஆதாரம் என்ன? பதில் : பிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள். (அல்குர்ஆன் : 40:46) மிகப்பெரும் நிராகரிப்பாளரான பிர்அவ்னையும் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அவனது கூட்டத்தாரையும் பற்றி இந்த வசனம் பேசுகின்றது. பாவம் செய்த முஸ்லிம்களின் தண்டனை இதை விடக் குறைந்தளவாக இருக்கும் என்பதில் ... Read more

மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன?

கேள்வி : சிலர் மறுமையையும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றையும் மறுக்கின்றனரே இவர்களின் நிலை என்ன? பதில் : இவ்வாறு கூறுபவர் ஒரு முஸ்லிமாக மட்டுமன்றி யூத, கிறிஸ்தவராக கூட இருக்க முடியாது. (இவ்விடயத்தில்) யூத, கிறிஸ்தவர்கள் அவரை விட சிறந்தவர்கள். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பாத நாத்திகராகவே இருப்பார். அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவன் தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை மறந்துவிட்டு, “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று ... Read more