அல் ஹலீம் பெருந்தன்மை உடயவன்):
உயர்ந்தோன் அல்லாஹு கூறுகிறன்றான்
وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ
மேலும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; எனவே, அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், ஹலீமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!
[அல்குர்ஆன் 2:235]
அவன் தான் பூரண குறையற்ற பெருந்தன்மை கொண்டவன், அவனுடைய பெருந்தன்மை காஃபிர்களையும், பாவிகளையும், அவனுக்கு கீழ்ப்படியாதவர்களையும் சூழும். அவர்கள் பாவமன்னிப்பு கேட்டு மீள அவன் கால அவகாசம் கொடுக்கின்றான், அவா்களின் பாவேங்களுக்கு உடனுக்குடன் தண்டிப்பதில்லை.
நிச்சயமாக பாவங்கள், அதற்குரிய தண்டைனைகளை உடனுக்குடன் தர தகுதியானவையே, ஆனால் அல்லாஹ்வுடைய ஹில்மெனும் பெருந்தன்மை தான் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க காரணமாக இருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
وَلَوْ يُـؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰى ظَهْرِهَا مِنْ دَآ بَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِيْرًا
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக் குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) உயிரையும் விட்டு வைக்கமாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரையிலும் விட்டு வைக்கின்றான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.
[அல்குர்ஆன் 35: 45]
وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَـاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் பட்சத்தில் ஒரு விநாடியும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 16:61]
( ஷேக் ஸயீது இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானி)
الْحَلِيمُ
قال الله تعالى: {وَاعْلَمُواْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْلَمُواْ أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ} (2).
وهو الذي له الحلم الكامل الذي وسع أهل الكفر والفسوق، والعصيان حيث أمهلهم ولم يعاجلهم بالعقوبة ليتوبوا، ولو شاء لأخذهم بذنوبهم فور صدورها منهم؛ فإن الذنوب تقتضي تَرتُّبِ آثارها عليها من العقوبات العاجلة المتنوعة، ولكن حلمه سبحانه هو الذي اقتضى إمهالهم (2) كما قال تعالى: {وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِن دَابَّةٍ وَلَكِن يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا} (3)، وقال تعالى: {وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَآبَّةٍ وَلَكِن يُؤَخِّرُهُمْ إلَى أَجَلٍ مُّسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لاَ يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: