கேள்வி:
பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது?
பதில்:
பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை செவிமடுப்பதும் ஆகுமாக மாட்டாது.
ஆனால், அவர்களின் வழிகேட்டை தெளிவுபடுத்தி அவர்களின் (கருத்துகளுக்கு) மறுப்புக் கூற விரும்பும் மார்க்க விடயங்களில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களுக்கு வாசிக்க முடியும்.
ஆரம்பப் பருவத்தில் உள்ளவர்களும், அறிவைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவர்களின் புத்தகங்களை வாசிக்கக் கூடாது. ஏனெனில், (அந்தப் புத்தகங்களில்) கூறப்பட்டுள்ள கருத்துகள் இவர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
பதிலளித்தவர்:
அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.
பார்க்க:
“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة” (133 -134)
மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
Great work …. keep going.. the Almighty will shower the good … Ameen