கேள்வி: தற்போது அழைப்பு பணியை மேற்கொள்ளும் கூட்டமைப்புகள் அதிகமாகக் காணப்படுவதோடு அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்பாளர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஆனாலும் அந்த அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன?
பதில்:
முதலாவதாக,
அழைப்புப் பணியிலும் அதுவல்லாத ஏனைய விடயங்களிலும் அதிகமான கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வதன்பால் நாம் மக்களைத் தூண்ட மாட்டோம். அதற்கு மாறாக அல்லாஹ்வின்பால் அறிவுடன் அழைக்கும் ஒரு கூட்டமைப்பையே நாம் விரும்புகிறோம்.
அதிகமான கூட்டமைப்புகளும், வழிமுறைகளும் நமக்கு மத்தியில் தோல்வியையும், பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
அல்லாஹ் கூறினான்:-
(( நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும். ))
(அல்குர்ஆன் : 8:46)
மேலும் அல்லாஹ் கூறினான்:-
(( யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள் ))
(அல்குர்ஆன் : 3:105)
மேலும் அல்லாஹ் கூறினான்:-
(( இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் ))
(அல்குர்ஆன் : 3:103)
இரண்டாவதாக,
அழைப்புப் பணியில் ஈடுபடும் அழைப்பாளர்கள் மனத்தூய்மையாக இருப்பது அழைக்கப்படும் நபர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அழைப்பாளன் மனத்தூய்மையாக இருப்பதோடு சரியான வழிமுறையின் பக்கம் மக்களை அழைப்பவராகவும் இருக்க வேண்டும்.
பதிலளித்தவர்:
அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.
பார்க்க:
“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة”
(பக்கம்:42-44)
(புத்தகத்தின் கேள்வி இலக்கம்- 16)
மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: