ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி:

7.ஸகாத் உடைய அளவீடு என்றால் என்ன? அது ஸகாத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதற்கு ஆதாரம் என்ன?

பதில்:-

சொத்துக்களில் ஸகாத் கடமையாவதற்கு குறிப்பிடப்பட்ட ஒரு அளவீட்டை மார்க்கம் வைத்துள்ளது. அதை ஒருவர் எத்திக்கொண்டால் ஸகாத் கடமையாகும். இதற்கு அரபு மொழியில் “நிஸாப்b” என்று கூறப்படுகிறது.
அந்த அளவீடு ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
எனவே ஒருவரிடம் எந்த வித சொத்துக்களும் இல்லையெனில் அவரின் மீது ஸகாத் கடமையாக மாட்டாது. அதேபோல் ஒருவரிடம் சில சொத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் ஸகாத்திற்குறிய குறிப்பிடப்பட்ட அளவை அது எத்திக்கொள்ளாத போது அவருக்கும் ஸகாத் கடமையாக மாட்டாது.

அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:
(( ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு “வஸக்” 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை. )) (புகாரி : 1405.)

⛳பார்க்க:-
“الشرح الممتع للشيخ ابن العثيمين” (2/457)

கேள்வி:

8.சொத்துக்களுக்கு வருடம் பூர்த்தியடைவது ஸகாத்துடைய நிபந்தனைகளில் உள்ளதாகும். அதற்கான ஆதாரம் என்ன?

 

பதில்:-

 

ஸகாத் கடமையாகும் சொத்துக்களுக்கு ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும்.

அதற்கான ஆதாரம் என்னவென்றால்,

அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:-

(( வருடம் பூர்த்தியாகும் வரையில் சொத்துக்களில் ஸகாத் இல்லை.))

(முஸ்னத் அஹ்மத்:1265)

மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸை அஷ்ஷைக் அல்பானி -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள்”ஆதாரபூர்வமானது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

 

(ஸஹீஹுல் ஜாமிஃ-7497)

 

⛳ பார்க்க:-

“الشرح الممتع للشيخ ابن العثيمين” (2/457)

இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.

அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.

தமிழில்:-

அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply