கேள்வி :
வெள்ளிக் கிழமை தினத்தன்று அஸருடைய கடைசி வேளையானது “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரமா ?
இந்த நேரத்தில் முஸ்லிம் ஆண்கள் மஸ்ஜித்களிலும் பெண்கள் வீடுகளிலும் இருக்க வேண்டுமா?
பதில் :
அல்ஹம்துலில்லாஹ்
வெள்ளிக் கிழமை தினத்தன்று “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களில் மிகச் சரியான இரண்டு கருத்துக்கள் வருமாறு :
முதலாவது :
அஸர் தொழுகையின் பின்னர் முதல் சூரியன் மறையும் வரைக்குமான காலப்பகுதியாகும்.
வீட்டிலோ அல்லது மஸ்ஜிதிலோ அல்லாஹ்வை பிரார்த்தித்தவர்களாக மஃரிப் தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்கள் இந்த நேரத்தில் கேட்கும் எந்தவொரு துஆவும் அல்லாஹ்வால் ஏற்கப்படுவதற்கு மிகவும் தகுதியானதாகும்.
ஆனால், சட்டப்பூர்வமான ஆதாரங்களிலிருந்து நன்கு அறியப்பட்ட நியாயமான காரணம் எதுவுமின்றி மஃரிபையோ அல்லது வேறு தொழுகைகளையோ ஓர் ஆண் வீட்டில் தொழ முடியாது.
இரண்டாவது :
வெள்ளிக்கிழமை பிரசங்கத்திற்காக(குத்பாவிற்காக) இமாம் பிரசங்க மேடையில்(மிம்பரில்) அமர்ந்ததிலிருந்து தொழுகை முடியும் வரையிலான நேரமாகும்.
எனவே, இந்த இரண்டு நேரங்களிலும் இரைஞ்சப்படும் பிரார்த்தனைகள் பதிலளிக்கப்பட மிகவும் பொருத்தமானவைகளாகும்.
வெள்ளிக் கிழமை தினத்தில் இவ்விரு நேரங்களும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்கு மிகவும் தகுதியான சந்தர்ப்பங்களாகும்.
இதற்கான சான்றுகள் ஸஹீஹான (ஆதாரபூர்வமான) ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன.
மேலும், “துஆ” அங்கீகரிக்கப்படும் இந்நேரமானது, இந்நாளின் மீதமுள்ள எல்லா நேரங்களிலும் இருப்பதாகவே ஆதரவு வைக்கப்பட்டுகிறது.
அல்லாஹ்வின் அருள் விசாளமானது.
ஃபர்ளான நஃபிலான அனைத்து தொழுகைகளிலும் ஸுஜூதுடைய நிலை “துஆ” அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.
இது பற்றி நபி (صلى الله عليه وسلم) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
” அடியான் ஸஜ்தாவில் இருக்கும் போதே தனது இறைவனுக்கு மிக நெருக்கமானவனாக இருக்கிறான். எனவே பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள் “
தொழுகை பற்றிய அபு ஹுரைரா(رضي الله عنه ) அவர்களின் ஹதீஸிலிருந்து இதனை முஸ்லிம் ( رحمه الله) அவர்கள் தனது சஹீஹில் விவரிக்கிறார்.(482)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்( றழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை முஸ்லிம் ( றஹ்) அவர்கள் பின்வருமாறு விவரிக்கிறார் :
” ருகூஃவை பொறுத்தவரை, அல்லாஹ்வை அதில் மகிமைப்படுத்துங்கள், மேலும், ஸுஜூதைப் பொறுத்தவரை, துஆ கேட்பதில் அதீத முயற்சி செய்யுங்கள்.
ஏனெனில், அதுவே, “துஆ” அங்கீகரிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகும். “
தொழுகை பற்றி முஸ்லிம் (479)
“கமினுன்” எனும் நபியவர்கள் கூறிய வாசகம் “பொருத்தமானது, தகுதியானது ” என்ற கருத்துக்களை கொடுக்கிறது.
தமிழாக்கம்: ரிஸ்வான் மீஸாணி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: