கேள்வி:
ஜனாஸா கிரியைகளின் போது மரணித்தவரை சுமந்து செல்கையில் அல்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட போர்வையால் சந்தாக்கை (மரணித்தவரைச்) சுமக்கும் பெட்டியை மூடுவதின் சட்டம் என்ன?
بسم الله الرحمن الرحيم
விடை: இந்த செயலுக்கு மார்க்கத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அதாவது, சந்தாக்கின் மேலால் மரணித்தவரை மூடுகின்ற போர்வையில் குர்ஆன் வசனங்களை எழுதுவதற்கு மார்க்கத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மாறாக, மரணித்தவரை போர்த்தும் போர்வையாக அதனை ஆக்கிக்கொள்வது எதார்த்தத்தில் குர்ஆனாகிய அல்லாஹ்வின் பேச்சை இழிவுபடுத்தும் செயலாகும். இன்னும், அது எந்த ஒன்றைக்கொண்டும் மரணித்தவருக்குப் பயனளிக்காது. எனவே, இதனடிப்படையில் அதனைத் தவிர்ந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால்:
முதலாவதாக: இது ஸலபுகளின் செயல்களில் உள்ள ஒன்றல்ல.
இரண்டாவதாக: சங்கைமிக்க குர்ஆனை இழிவுபடுத்துவது இச்செயலில் இருக்கின்றது.
மூன்றாவதாக: இது விடயத்தில் மோசமான ஒரு நம்பிக்கை முன்வைக்கப்படுகின்றது. அதாவது, இப்போர்வை மரணித்தவருக்குப் பயனளிக்கும் என்ற நம்பிக்கையாகும். அது மரணித்தவருக்கு – எவ்விதப் – பயனும் அளிக்காது.
பார்க்க: மஜ்மூஉ பதாவா இப்னி உஸைமீன் – 17/168
தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: