அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சுவனவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கும் மிகப்பெரிய அருள் தான் அல்லாஹ்வின் மிகமகத்தான முகத்தை பார்ப்பதாகும்.அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தருவானாக! சுவனவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது பற்றி அதிகமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து யாரும் விதிவிளக்காக்கப்பட மாட்டார்கள். ஆதாரங்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்துள்ளது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின் ஓர் அழைப்பாளன் “சுவனவாசிகளே! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒன்று உள்ளது என்று கூறுவார் .அதற்கவர்கள் “அது என்ன? (இரட்சகனே!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவனத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா? ” என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், தன் திரையை விலக்கிவிடுவான். அப்போது அவர்கள் அவனைப் பார்ப்பார்கள்.தம் இரட்சகனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.”
இதை ஸுஹைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 297. பதாவா இப்னு தைமியா 6/449
இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது
” சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின்” என்ற வார்த்தை ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கும் இவ்வார்த்தை இருபாலாரையும் உள்ளடக்கும். அதேபோன்று ‘சுவனவாசிகளே’ என்ற வார்த்தை சுவனில் நுழைந்த அனைவரையும் விழித்தே வந்துள்ளது.
பதாவா இப்னு தைமியா 6/449
ஆக சுவனவாசிகள், இறுதியாக நுழைபவர் உற்பட அனைவரும் அல்லாஹ்வை சுவனத்தில் பார்ப்பார்கள்.
மொழிபெயர்ப்பு:அஹ்ஸன் அல்கமி,ஆசிரியர்:மர்கஸு அல்கமா
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: