கேள்வி:
ஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபிﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள்.ஆனால் ஒருவர் தற்பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமா?தற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபாண்டு) கால்சட்டை –கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா?
பதில்:
கால் சட்டை,வேஷ்டி போன்ற ஆடைகள் கணுக்காலுக்கு கீழே தொங்கவிடுவது பொதுவாக ஹராமாகும்.அவ்வாறு அணிவது தற்பெருமையும்,ஆணவத்தையும் அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரியே.அவ்வாறு அணிவதே தற்பெருமைக்கும்,ஆணவத்திற்குமான வாய்ப்பாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு ஹராமாகி விடுகிறது.இன்னும் கணுக்காலுக்கு கீழே செல்லும் ஆடை நரகத்திற்குறியது என்று நபி ﷺஅவர்கள் பொதுப்படையாக கூறியுள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ»
இறைத்தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்:
கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் புகுவார்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)[நூல் புஹாரி,5787,அஹ்மத்,7467,சுன்ன் நஸயி,5330]
அதேவேளையில் கீழ் ஆடை கணுக்காலுக்கு மேல் இருக்கும் விதத்தில் இருந்தும் சிலநேரங்களில் கவனக்குறைவாக இருக்கும்போது கீழ் இறங்கி கணுக்காலுக்கு கீழ் சென்றுவிடுகிறது என்றால் அது ஹராம் ஆகாது. ஏனெனில் அது தற்பெருமையாகவோ,ஆனவத்துடனோ செய்யும் செயலல்ல.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ، لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ القِيَامَةِ» فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ أَحَدَ شِقَّيْ ثَوْبِي يَسْتَرْخِي، إِلَّا أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ لَسْتَ تَصْنَعُ ذَلِكَ خُيَلاَءَ»
“தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்’ என்று இறைத்தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர் (ரழியல்லாஹுஅன்ஹு), ‘நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது” என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்ﷺஅவர்கள், ‘நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழியல்லாஹு அன்ஹு) நூல்:புஹாரி 3665,அபூதாவூத்,4085, நஸயி,5335
தற்பெருமையை நாடி ஆடையை தொங்க விடுவது தான் ஹராம் என்று அபூபக்ர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் சம்பவத்தை எடுத்துகூறி சில அறிஞர்கள் கூறுகிறார்கள்,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا»
இறைத்தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்:
கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்..
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) நூல்:புஹாரி 5788
தற்பெருமையுடன் உடுத்தினாலும் சரி தற்பெருமை இல்லாமல் உடுத்தினாலும் சரி அனைத்துமே ஹராம் என்பது தான் சரியான கருத்து.இது தொடர்பாக வந்துள்ள ஆதாரபூர்வமான நபிமொழிகள் அனைத்தும் பொதுப்படையாகத்தான் வந்துள்ளது.
மூலம் :லஜ்னத்து தாயிமா கேள்வி எண்:3 ஃபத்வா எண்:1583 தொகுதி எண்:-6/24,25
மொழிபெயர்ப்பு:பஷீர் ஃபிர்தெளஸி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: