ஸகாத் குறித்த கேள்வி பதில்கள்
கேள்வி:
11. பழங்கள், வித்துக்களில் வருடம் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லையா? இதனை சற்று தெளிவு படுத்தவும்???
பதில்:-
பழங்களையும், வித்துக்களையும் அறுவடை செய்யப்பட்டதும் அவைகளது ஸகாத்தை வழங்க வேண்டும். ஒருவர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யும் போது, அறுவடை செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஸகாத் கொடுப்பது அவருக்கு கடமையாகும்.
கேள்வி:
12. கால் நடைகள் ஈன்றெடுத்த குட்டிகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனை உண்டா?அதனை உதாரணம் கூறி தெளிவு படுத்தவும்.
பதில்:-
உதாரணமாக, ஒருவரிடம். வருடம் பூர்த்தியான 40 ஆடுகள் காணப்படுகின்றன. எனவே அவைகளில் 1 ஆட்டை ஸகாத்தாக வழங்க வேண்டும். இவைகளில் 39 ஆடுகள் சுமாராக மூன்று மூன்று குட்டிகளை ஈன்றடுக்கின்றன. ஒரு ஆடு மாத்திரம் 4 குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. தற்போது அவரிடம் 121 ஆடுகள் காணப்படுகின்றன. குட்டி ஆடுகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. ஆனாலும் ஒரு வருடம் பூர்த்தியான ஆடுகளுடன் இவைகளை இனைத்து 2 ஆடுகளை ஸகாத்தாக வழங்க வேண்டும்.
ஏனெனில், குட்டி ஆடுகள் அவைகளது தாய் ஆடுகளையே பின்தொடர்கின்றன.
⛳ பார்க்க:-
“الشرح الممتع للشيخ ابن العثيمين” (2/488)
இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.
அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.
தமிழில்:-
அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: