கேள்வி
ஸகாத்துல் ஃபித்ரை சர்க்கரை, தேநீர் மற்றும் டின்னில் அடைத்த பொருட்கள் (இன்னும் இது போன்ற மற்ற பொருட்கள்) போன்றவற்றில் இருந்து கொடுக்கலாமா?
பதில்
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
முதலில்:
மக்கள் முக்கிய உணவாகக் கருதும் பொருட்களைத் தவிர, ஸகாத்துல் ஃபித்ராக வேறு பொருட்களை கொடுப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல.
ஸஹிஹுல் புகாரியில் அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஹதீஸின் மூலம் இது உறுதிபடுத்தபடுகிறது.
அபூசயீத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாஉ உணவுப் பொருளை (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மமாகக் கொடுத்துவந்தோம்.
அக்காலத்தில் தொலி நீக்கப்படாத கோதுமையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன
ஸஹீஹ் அல் புகாரி 1510
இதிலிருந்து அவர்கள் தங்களின் முக்கிய உணவாக தாங்கள் உண்டதை ஒரு ஸாவு அளவு கொடுப்பார்கள் என்பது தெரிகிறது.
மக்களின் பிரதான உணவாகக் கருதப்படாத ஒன்றை ஸகாத்துல் ஃபித்ராகக் கொடுப்பது அனுமதிக்கப்படாது.
“பிரதான உணவு” என்பதன் பொருள் என்னவென்றால், மக்கள் தங்கள் அடிப்படை உணவாக உண்ணும் பொருட்கள்.
கோதுமை, அரிசி மற்றும் பிற அடிப்படை உணவுகள் பிரதான உணவுகளில் அடங்கும், அவை தொடர்ந்து மக்களின் உடல்களுக்கு ஊட்டமாக வழக்கமாக பயன்படும் உணவுப் பொருட்களும் அடங்கும்.
பார்க்க:அல் மவ்ஸூஆ அல் ஃபிக்ஹியாவில் (6/44)
சர்க்கரை மற்றும் தேநீர் – மக்களின் தேவைகளில் இருந்தாலும்- அவை மக்கள் முக்கிய உணவாக உட்கொள்ளும் பொருட்கள் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.இதன் அடிப்படையில் அவற்றை ஸகாத்துல் ஃபித்ராக வழங்குவது அனுமதிக்கப்படாது.
இரண்டாவதாக:
கேன்களில் அடைக்கப்பட்ட பொருட்கள் (அப்பகுதி) மக்கள் பிரதான உணவுகளாக கருதும் உணவுகள் என்றால், அவற்றை ஸகாத் அல் ஃபித்ராக வழங்குவதில் எந்த தவறும் இல்லை.
அதாவது ஃபவுல் (ஃபாவா பீன்ஸ்), கொண்டைக்கடலை, சோளம், பட்டாணி, பீன்ஸ் மற்றும் அதைப் போன்று.
ஆனால் இந்த (கேன்) உணவுகளில் இவற்றுடன் சேர்த்து பிற பொருட்கள் கேன்களில் சேர்கப் பட்டிருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே எடை மற்றும் அளவைக் கணக்கிடும்போது அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
(இமாம்) இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வகை பிரதான உணவுப் பொருட்களுடன் கலக்கப்பட்ட மற்ற பொருளானது பிரதான உணவின் ஒரு பங்கை எடுத்துக் கொண்டால்,
மேலும் கலக்கப்பட்ட பொருளின் அளவு ஏற்றுக் கொள்ள முடியாததாகக் கருதப்படும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது (ஸகாத்துல் ஃபித்ர் என) ஏற்றுக் கொள்ளப்படாது.
ஆனால் கலக்கப்படும் பொருளானது அதிகமாக இல்லை என்றால், அது ஸகாத் அல்-ஃபித்ராக கொடுக்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் அந்த பங்கை முழு ஸாஆவாக ஈடுசெய்ய ஒரு ஸாவுக்கு மேல் கொடுக்கப்பட்டால்,
-அல் முக்னி (4/294)
அல்-மிர்தாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
பிரதான உணவுடன் சேர்க்கப்பட்ட பொருளின் அளவு அதிகமாக இருந்தால், அந்த சேர்க்கப்பட்ட பொருளின் அளவிற்கு ஈடுசெய்யும் வகையில் பிரதான உணவானது மேலும் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினால் அது சரியாக இருக்கும் [இதனால் கேள்விக்குரிய பிரதான உணவின் அளவானது முழு ஸாவு ஆக கிடைக்கும்].
– அல் இன்சாஃப் 3/130
மிர்தாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியது தான் சரியான நிலைபாடு.
ஏனென்றால் ஸகாத்துல் பித்ர் என்பதன் நோக்கம் மக்கள் சாப்பிடக்கூடிய உணவு ( முக்கிய பிரதான உணவு) கொடுப்பதே நோக்கம்.
ஒரு நபர் கேன்களில் பவுல் பீன்ஸுடன் மற்றொரு பொருளையும் கலந்து கொடுத்தால், அதில் பீன்ஸ்-ன் அளவு மட்டும் ஒரு ஸாஃவுடைய அளவை எட்டினால்,அதில் எந்தத் தவறும் இல்லை, ஏனென்றால் அவர் தனக்குத் கடமையை நிறைவேற்றி விட்டார்.
அதாவது ஒரு பிரதான உணவினை கொடுக்க வேண்டும்.அதனை கொடுத்துள்ளார்.
மேலும்,அந்த பொருள் கெட்டுப்போகாமல் இருக்கவும், சுவையை அதிகரிக்கவும் அதில் சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே அவற்றை சேர்ப்பது ஒரு தவறாக கருதப்படாது.
(பிரதான உணவு ஒரு ஸாவு அளவை கட்டாயம் அடைந்து அதனுடன் மற்றொரு பொருள் அதிகமாக கலந்து இருப்பதில் எவ்வித தவறும் இல்லை.மாறாக பீன்ஸ் மற்றும் அதனுடன் கலக்கப்பட்ட உணவு இரண்டும் இணைந்து ஒரு ஸாவு அளவை எட்டினால் அது ஸகாத்துல் பித்ராக கணக்கிடப்படாது)
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
Source:islamqa
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: