ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?  

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 1️⃣ :

ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?

(அல்லது) ரமழான் முழுவதும் நோன்பு நோற்க ஒரு நிய்யத் மாத்திரம் போதுமானதா.?

ஒருவர் எப்போது தனது நிய்யத்தை வைக்க வேண்டும்.?

 

பதில் :

 

நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :

 

إنما الأعمال بالنية و إِنَّمَا لِكُلِّ أَمْرِي مَا نَوَى

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.’

(📖 நூல் : ஸஹீஹ் புகாரி 1)

 

ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகும். எனவே, வெளிப்படையாக தெரிவது என்னவெனில் ஒருவர் ஒவ்வொரு நாளும் (தனித்தனியே) நிய்யத் வைக்க வேண்டும்.

 

சிலர் கூறுவதைப் போல நிய்யத் என்பது வாயால் மொழிவது அல்ல.! மாறாக, உள்ளத்தால் எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும்.

 

ஒரு நபர் சஹர் நேரத்தில் நோன்பு வைப்பதை நாடி (படுக்கையிலிருந்து) எழுவதே நோன்புக்கான நிய்யத்தாக கருதப்படும். அதேபோல உணவு மற்றும் பானத்திலிருந்து தவிர்ந்திருப்பதும் நோன்பிற்கான நிய்யத்தாக கருதப்படும்.

 

ஏனென்றால், நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :

 

مَنْ لَمْ يَبِيْت الصومَ فَلا صَوْمَ لَهُ

 

“யாரேனும் நோன்பு வைக்கும் எண்ணமில்லாமல் தூங்கிவிட்டால், அவருக்கு எவ்வித நோன்புமில்லை”.

 

📖 நூல் : இப்னு ஹிப்பான்

 

இது பலவீனமான ஹதீஸ் ஆகும்; இது முதர்ரிப் (பலவீனமான ஹதீஸ்களின் ஒரு வகை), இருப்பினும் சில அறிஞர்கள் இதனை ‘ஹஸன்’ என்கிறார்கள்.

 

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இரண்டாம் பாகத்தை வாசிக்க

வீடியோ வடிவில் பார்வையிட:

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply