ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 2️⃣5️⃣ :

ரமழானின் பகல் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் மார்க்கச் சட்டத்தை அறியாமல், அவ்வாறான செயலில் ஈடுபட்ட நபர் குறித்த சட்டம் யாது..?

பதில் :

முன்னர் குறிப்பிட்டதுபோல, பரிகாரம் செய்வது அந்நபர் மீது கட்டாயமாகும்; ஏனென்றால், (இது பற்றிய) ஹதீஸ் பொதுவானதாக வந்துள்ளது.

 

கேள்வி 2️⃣6️⃣ :

(ரமழான் நோன்பின்போது) தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், (சாதாரணமாக) தொடுவது மற்றும் முத்தமிடுவதன் மார்க்கச் சட்டம் என்ன.?

பதில் :

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது :

‘நபி (ﷺ) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக நபியவர்கள் இருந்தார்கள்!….”

(நூல் : ஸஹீஹ் புகாரி 1927)

இவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை; ஆனாலும், அவ்வாறு கட்டியணைத்து முத்தமிடுவதன் மூலம் தாம் உடலுறவில் ஈடுபட்டுவிடுவோம் என்று ஒருவர் பயந்தால், அவர் முத்தமிடுவது மற்றும் கட்டியணைப்பதை தவிர்ந்துகொள்வது கட்டாயமாகும்.

கேள்வி 2️⃣7️⃣ :

ரமழானின் பகல் பொழுதில் தூக்கத்தின்போது கனவு ஏற்பட்டு, அதன்மூலம் விந்து வெளியேறினால் அதனுடைய சட்டம் என்ன.?

பதில் :

அவர் மீது எந்த குற்றமுமில்லை; அவர் அன்றைய நோன்பை முழுமைப்படுத்தட்டும்.

மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply