மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன?

கேள்வி : சிலர் மறுமையையும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றையும் மறுக்கின்றனரே இவர்களின் நிலை என்ன?

பதில் :
இவ்வாறு கூறுபவர் ஒரு முஸ்லிமாக மட்டுமன்றி யூத, கிறிஸ்தவராக கூட இருக்க முடியாது. (இவ்விடயத்தில்) யூத, கிறிஸ்தவர்கள் அவரை விட சிறந்தவர்கள். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பாத நாத்திகராகவே இருப்பார்.

அல்லாஹ் கூறுகிறான் :

மேலும், அவன் தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை மறந்துவிட்டு, “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று
அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்.

“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 36:78,79)

பதிலளித்தவர்:இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

நூல்: أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

*السائل :* بخصوص – يعني مثل هذه المجالس أحياناً يعني يضطر البعض في بعض الأسئلة عن الدنيا والجنة والنار من الجالسين أو من عامة الناس. البعض منهم ينكرون الآخرة وينكر ن الجنة يعني يقولون إنه إذا مات الميت خلاص راح مات – كالكلب – فمثل هذا الرجل أو هذا القائل يعني ما الحكم في ذلك؟

*الشيخ الألباني رحمه الله :* هذا ليس مسلما ولا يهوديا ولا نصرانيا، واليهود والنصارى خير منه. يعني هذا دهري هذا زنديق ملحد. وهو لا يؤمن بالله ولا برسوله. وفي القرآن الكريم
وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَهٗ‌  قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ‏
.قُلْ يُحْيِيْهَا الَّذِىْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ‌  وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمُ ۙ‏ “

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply