மனைவி தன் உறவினர்களுடன் உறவு பேண கணவர் தடுக்களாமா?

கண்ணியம் வாய்ந்த ஷெய்கு அவர்களே, தன் மனைவியை அவளின் குடும்பத்தாரின் உறவுகளை புறக்கணிக்குமாறு கட்டளை இட கணவனுக்கு அனுமதி உண்டா?

பதில்:
புகழனைத்தும் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விற்க்கே, நம் நபியாகிய முஹம்மதின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்கள், மற்றும் அவரை கியாமத்து நாள் வரை பின்பற்றுவோரின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் கூறுகின்றேன்.

கணவன் தன் மனைவியை அவளின் இரத்த உறவுகளை புறக்கணிக்க, உறவை துண்டிக்க கட்டளை இட அனும்திக்க பற்து அல்ல. குடும்பத்தாருடன் உறவு பேணுவது வாஜிப் (கட்டாய கடமை). குடும்ப உறவை துண்டிப்பது பாவமாகும்.

படைப்பாலனின் கட்டளைகளை மீரும்வன்னம் எந்த படைப்பையும் பின்பற்றக் கூடாது.(ஹதீஸ்)

ஆனால் அவள் தன் குடும்பத்தாருடன் உறவு பேனுவதால், கணவருக்கு தீங்குகள் ஏற்பட்டால், உதாரணமாக, இந்த உறவினர்கள் தீயவர்களாகவும், கேடு இலைப்பவர்களாகவும், அவதூறு பரப்புபவர்களாகவும் இருந்து, கணவர் மனைவிக்கு மத்தியில் நாசவேலைகள் செய்வோராக இருந்தால்,அவர் தன் மனைவியை அவர்களை சந்திக்கவும், நெருங்கவும் தடுக்கலாம்.

உறவு பாராட்டுவது என்பது அவர்களை சந்திப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது, மேலும் அது போன்று அன்பை ஏற்படுத்தும் பிற காரியங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது.

ஆகையால், கணவர் தன் மனைவியின் உறவுகளை பேண தடுக்க கூடாது, அதனால் அவருக்கோ, அவளுக்கோ தீங்குகள் நேறாத வரை.

ஷெய்க் முஹம்மது இப்னு ஸாளிஹ் அல் உஸைமீன்.

கேள்வி:

ஒரு பெண் தன் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் ஆகிய உறவினர்களுடன் உறவை துண்டிக்குமாரு கூறும் கணவனின் கட்டளையை பின்பற்றலாமா.

அவ்வாறு செய்தால் அது யார் மீது குற்றம்.

அந்த கணவர் தன் மனைவியை இவ்வாறு உறவுகளை துண்டிக்குமாரு கட்டாயப்படுத்துவதற்க்கு ஆதாரமாக நபி صلى الله عليه وسلم அவா்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவமாக கூறுகிறார், அதில் ஒரு பெண் தன் கணவனை இது போன்று பின் பற்றி தன் தந்தையை புறக்கணித்து வந்தார், அவா் மரணிக்கும் வரை அவரை சந்திக்க வில்லை. நபி صلى الله عليه وسلم அந்த பெண் செய்ததை பொருந்திக்கொன்டு, அந்த தந்தை, அந்த பெண் தன் கணவரை பின்பற்றிய காரணத்தால் அவர் சுவனம் சென்றார், அல்லது அவாின் பாவங்கள் மன்னிக்க பட்டது என்று கூறினார்.

இந்த ஹதீஸின் ஆதரத்தன்மை என்ன? இந்த விடயத்தில் சட்டம் என்ன?

பதில்:

புகழ் யாவும் அல்லாஹ்விற்கே.

தூய்மையும் உயர்வும் கொண்ட அல்லாஹ், பெற்றோர்களின் உரிமைகளையும், உறவினர்களின் உரிமைகளையும் பேனுவதை கடமை ஆக்கியுள்ளான். மேலும் பெற்றோர், உறவினரின் உறவை துண்டிப்பதை தடுத்துள்ளான்.

பெற்றோர்களின் உறவை துண்டிப்பது அத்துமீறல் ஆகும், மேலும் ஷிர்க்கிற்க்கு பின்னர் உள்ள பெரும்பாவங்களில் இதுவும் ஒன்று.

இரத்த உறவை துண்டிப்பதும் பெரும்பாவங்களில் ஒன்று.

அல்லாஹ் கூறுகின்றான்

فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَتُقَطِّعُوٓا۟ أَرْحَامَكُمْ

(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர், நீங்கள் பூமியில் சென்று விஷமம் (கலகம்) செய்து உங்கள் இரத்த உறவுகளை துண்டித்துவிடப் பார்க்கிறீர்களா?

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰٓ أَبْصَٰرَهُمْ

இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையையும் போக்கி குருடர்களாக்கி விட்டான்.

(ஸூரா முஹம்மத்22-23)

கணவர், மனைவியை தன் இரத்த உறவுகளை துண்டிக்குமாரு கட்டாயப் படுத்துவது அனுமதிக்கப்பட்டது அல்ல, அது பாவமான செயலாகும், மேலும் அதனால் பல கேடுகள் விளையும்.

கணவனானாலும், யாராக இருந்தாலும், அவரை நன்மைகளில் மட்டும் தான் பின்பற்ற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்:

நன்மைகளில் மட்டும் தான் ஒருவரை பின்பற்ற வேண்டும்”.(அல் புகாரி)

மற்றும் ஒரு ஹதீஸில்

“படைப்பாலனை புறக்கணிக்கும் வகையில் எந்த ஒரு படைப்பையும் பின்பற்றக் கூடாது” என்று கூறியுள்ளார்கள்.( மிஷ்காத்)

ஆகையால், மனைவியை தன் இரத்த உறவுகளோடு ஷரியத்தின் அடிப்படையில் உறவு பாராட்டுவதை விட்டும் தடுக்க அனுமதி இல்லை, ஏன் அவா் தன் மனைவிக்கு உறவுகளை பேண உதவவும் ஊக்குவிக்கவும் வேண்டும், ஏனென்றால் அதில் அவர்கள் இருவருக்கும் பல நன்மைகள் உள்ளது.

கேள்வியில் வரும் “ஹதீஸை” பொறுத்த வரை நான் அதை கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை, அதன் நிலை எனக்கு தெரியாது.

( மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு, இத ஹதீஸ் தவரானியில் இடம் பெறுகிறது. நூறுத்தீன் அல் ஹைதமி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர் ஒரு உள்ளார் என்று கூறுகிறார். பார்க் https://www.islamweb.net/ar/fatwa/18250/ )

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மஜ்மூ அல் ஃபதாவா ஷேக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்

தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்

السؤال
هل للزوجة أن تُطيع زوجها في قطيعة أهلها ، كأمها وأبيها وأخواتها وأقاربها ؟ وعلى من يكون الإثم هنا ؟ علماً أن الزوج يستشهد على إرغام زوجته بقطيعة أهلها بقصة امرأة في عهد الرسول صلى الله عليه وسلم أطاعت زوجها في مثل ذلك إلى أن مات أبوها ، ولم تره ، طاعةً لزوجها ، وأيدها الرسول في ذلك وقال : ( إن أباها دخل الجنة أو غفر له بسبب طاعتها لزوجها ) ، فما مدى صحة هذا الحديث؟ وما الحكم في هذا الموضوع ؟
الجواب
الحمد لله.

“الله سبحانه وتعالى أوجب حق الوالدين وحق الأقارب ونهى عن قطيعة الوالدين والأقارب ، فقطيعة الوالدين هذا عقوق ، وهو من أكبر الكبائر بعد الشرك ، وكذلك قطيعة الرحم كبيرة من الكبائر ، لقوله تعالى : (فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ * أُوْلَئِكَ الَّذِينَ لَعَنَهُمْ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ) محمد/22، 23 .
ولا يجوز للزوج أن يحمل زوجته على قطيعة أرحامها بغير حق ، لأنه بذلك يحملها على المعصية ، وعلى مقاطعة أرحامها ، وفي ذلك من الإثم ، والمفاسد الشيء الكثير ، وطاعة الزوج وطاعة كل ذي حق إنما تجب بالمعروف ، لقوله صلى الله عليه وسلم : ( إنما الطاعة بالمعروف ) ولقوله صلى الله عليه وسلم : ( لا طاعة لمخلوق في معصية الخالق ) فلا يجوز لهذا الزوج أن يمنع زوجته من صلة أرحامها في حدود المشروع ، في حدود المصلحة ، بل عليه أن يعينها على ذلك ، وأن يُشجعها على ذلك ، لأن في هذا الخير الكثير لها وله ، وأما الحديث الذي أشار إليه السائل ، فهذا لم أسمع به ، ولم أره ، ولا أدري ما حاله” انتهى .
الله أعلم .
“مجموع فتاوى الشيخ صالح الفوزان” (2/548

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply