பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |

 

பொய்யிற்குரிய சில தண்டனைகள்:

 

பொய் பேசுவதால் உள்ளதில் நயவஞ்சகத் தன்மை ஏற்படும்*

﴿فَأَعۡقَبَهُمۡ نِفَاقࣰا فِی قُلُوبِهِمۡ إِلَىٰ یَوۡمِ یَلۡقَوۡنَهُۥ بِمَاۤ أَخۡلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ یَكۡذِبُونَ﴾ [التوبة ٧٧]

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டு இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

 

பொய் பேசுபவர்களுக்கு கப்ர் வாழ்க்கையில் வழங்கப்படும் கொடூர தண்டனை:

‏عنْ سَمُرَةَ بْنِ جُنْدبٍ، قال: كانَ النبيُّ ﷺ إذا صَلّى صَلاةً أقْبَلَ عَلَيْنا بوَجْهِهِ فَقالَ: مَن رَأى مِنكُمُ اللَّيْلَةَ رُؤْيا؟ قالَ: فإنْ رَأى أحَدٌ قَصَّها، فيَقولُ: ما شاءَ اللهُ فَسَأَلَنا يَوْمًا فَقالَ: هلْ رَأى أحَدٌ مِنكُم رُؤْيا؟ قُلْنا: لا، قالَ: لَكِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أتَيانِي فأخَذا بيَدِي، فأخْرَجانِي إلى الأرْضِ المُقَدَّسَةِ، فَإذا رَجُلٌ جالِسٌ، ورَجُلٌ قائِمٌ، بيَدِهِ كَلُّوبٌ مِن حَدِيدٍ قالَ بَعْضُ أصْحابِنا عن مُوسى: إنّه يُدْخِلُ ذلكَ الكَلُّوبَ في شِدْقِهِ حتّى يَبْلُغَ قَفاهُ، ثُمَّ يَفْعَلُ بشِدْقِهِ الآخَرِ مِثْلَ ذلكَ، ويَلْتَئِمُ شِدْقُهُ هذا، فَيَعُودُ فَيَصْنَعُ مِثْلَهُ، قُلتُ: ما هذا؟ قالا: انْطَلِقْ، …

قُلتُ: طَوَّفْتُمانِي اللَّيْلَةَ، فأخْبِرانِي عَمّا رَأَيْتُ، قالا: نَعَمْ، أمّا الذي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ، فَكَذّابٌ يُحَدِّثُ بالكَذْبَةِ، فَتُحْمَلُ عنْه حتّى تَبْلُغَ الآفاقَ، فيُصْنَعُ به إلى يَومِ القِيامَةِ…

ஸமுரஹ் இப்னு ஜுன்தப் (றளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, ‘இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், அல்லாஹ் நாடியதை (விளக்கமாக) கூறுவார்கள். ஒரு நாள், ‘உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?’ என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், ‘நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது என்ன? என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர். அப்படியே நடந்தபோது… பிறகு நான் இருவரிடமும் ‘இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றி சொல்லுங்கள்!’ எனக் கேட்டேன். அதற்கு இருவரும் ‘ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். … நான் ஜிப்ரீல். இவர் மீக்காயில்’ என்று கூறினார்கள்… (புகாரி 1386)

இங்கே சுருக்கமாக கூறப்பட்டுள்ள சம்பவத்தை பின்வரும் புகாரியின் மேற்படி இலக்கத்திற்குச் சென்று முழுமையாக வாசிக்கவும்.

இன்ஷ அல்லாஹ் தொடரும்…

– ஹுஸைன் இப்னு றபீக் மதனி

முந்தைய தொடரை படிக்க:

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

1 thought on “பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 |”

  1. Pingback: - IslamQ&A Tamil

Leave a Reply