பாவி,பித்அத்-வாதி இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்?

கேள்வி:

இவர்கள் இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்? பாவத்தில் ஈடுபடும் பாவிகளா? அல்லது மார்க்கத்தில் புதுப் புது விடயங்களை உருவாக்கும் பித்அத்வாதிகளா?

பதில்:

பித்அத் செய்பவர்களே கடுமையாக தண்டிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், பித்அத் என்பது பாவத்தை விட மிகக் கடுமையானதாகவும், ஷைத்தானுக்கு மிக விருப்பமானதாகவும் இருக்கிறது. ஏனெனில் பாவம் செய்பவர்கள் தனது (பாவத்தை நினைத்து) அல்லாஹ்விடம் பாவமீட்சியில் ஈடுபடுபவர்கள். அத்துடன் தான் ஒரு பாவி என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள்.

(அதற்கு மாறாக) பித்அத் செய்பவர் தான் செய்யும் (பாவத்தை நினைத்து) குறைவாகவே பாவமீட்சியில் ஈடுபடுவார்கள். ஏனெனில் தான் சத்தியத்தில் இருப்பதாகவும், அல்லாஹ்வை வழிபடுவதாகவும் அவர் நினைத்துக் கொள்வார். எனவே தான், பித்அத் பாவத்தை விட மிகக் கடுமையானதாகும்.
இதன் காரணமாகவே, பித்அத் செய்பவர்களுடன் அமர வேண்டாமென நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

பதிலளித்தவர்:

 

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.

பார்க்க:

“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة” (பக்கம் 26)

மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply