நீங்கள் பிறை பார்த்ததை மக்கள் ஏற்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்

கேள்வி:

ஒரு  மனிதர் ரமழான், ஷவ்வால் பிறைகளை கண்டு, காழியிடம் (நீதிபதியிடம்), அல்லது மக்களிடம் சொல்லி அவர்கள், அவரின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது அந்த பிரதேச மக்கள் வைக்கும்போதுதான் நோன்பு வைக்க வேண்டுமா?

பதில்: இது விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் மூன்று கருத்துகள் உள்ளன:

1 – நோன்பு வைப்பதிலும், விடுவதிலும் அவர் பிறை பார்த்தபடி தனியாக செயல்படவேண்டும். இது இமாம் அஷ் ஷாஃபியின் கருத்து.

ஆனால் அவர், இவ்விரு காரியங்களையும் இரகசியமாக செய்ய வேண்டும், மக்களிடம் வெளிப்படுத்த கூடாது, அவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் அவரை, நோன்பை விட்டார் என்று தவராக எண்ணுவார்கள்.

2 – அவர் ரமழானின் துவக்கத்தில், தான் பிறை பார்ததின் அடிப்படையில் நோன்பு வைக்க வேண்டும், ஆனால் ரமழான் மாத முடிவில் நோன்பை விடும்போது மக்கள் நோன்பு விடும் போது தான் இவரும் விட வேண்டும்.

இது தான் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து, இதுவே இமாம் அபூ ஹனீஃபா, மாலிக், இமாம் அஹ்மத் ஆகியோரின் கருத்தும்.

இந்த கருத்தை தான் ஷேக் இப்னு உஸைமீன் தேர்வு செய்கிறார்கள், அவர் கூறினார்:

” இதன் மூலம் நாம் பாதுகாப்பான கருத்தை பின் பற்றுகிரோம், நோன்பு வைக்கும் விடயத்திலும், நோன்பு விடும் விடயத்திலும் பாதுகாப்பான கருத்தையே பின்பற்றுகிறோம். நோன்பு வைக்கும் விடயத்தில் அவரிடம் நோன்பு நோருங்கள் என்று கூறுகிறோம், நோன்பு விடும் விடயத்தில், அவ்வாறு செய்யாதீர்கள், நோன்பு வையுங்கள் என்று கூறுகிறோம்” (ஷர்ஹ் அல் மும்தி 6/330)

3 – அவர் இரு விடயங்களிலும் தாமாக செயல் படக்கூடாது, மக்களுடன் சேர்ந்து தான் நோன்பு வைக்க வேண்டும், விட வேண்டும்.

இது ஒரு அறிவிப்பின் படி இமாம் அஹ்மதின் கருத்து, இமாம் இப்னு தைமியா இந்த கருத்தை தான் தேர்வு செய்கிறார். இந்த விடயத்தில் பல ஆதாரங்களை முன்வைக்கிறார். அவர் கூறுகிறார்:

மூன்றாவது கருத்து அவர் மக்களுடன் சேர்ந்துதான் நோன்பு வைக்க வேண்டும், விட வேண்டும், இதுவே சரியான கருத்து.

நபி صلى الله عليه وسلم கூறினார்கள் :

“நீங்கள் நோன்பு வைக்கும் நாளே உங்களின் நோன்பு, நீங்கள் நோன்பை விடும் நாளே உங்களின் ஃபித்ர், நீங்கள் அறுத்து தியாகம் செய்யும் நாளே உங்களின் தியாகம்.” இந்த ஹதீஸை இமாம் திர்மிதீ அறிவித்து ஹஸன் கரீப் வகை ஹதீஸ் என்கிறார். இதே ஹதீஸை அபூ தாவூத், இப்னு மாஜாஹ்  ஆகியோரும் அறிவிக்கிறார்கள். இப்னு மாஜா நோன்பை விடுவதையும், அறுத்து தியாகம் செய்வதை மட்டும் தான் அறிவிக்கிறார்.

இமாம் அத்திர்மிதி அபூ ஹுறைரா அவர்களின் வாயிலாக நபி صلى الله عليه وسلم கூறியதாக அறிவிக்கிறார்:

“நோன்பு என்பது நீங்கள் நோன்பு வைக்கும் நாளே, ஃபித்ர் என்பது நீங்கள் நோன்பை விடும் நாளே, தியாகம் என்பது நீங்கள் அறுத்து தியாகம் செய்யும் நாளே.” இந்த ஹதீஸை இமாம் திர்மிதீ ஹஸன் கரீப் வகை ஹதீஸ் என்று கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸின் விளக்கத்தை கூறிய சில அறிஞர்கள், ஒருவர் நோன்பை ஜமாத்துடனும், பெரும்பாலான மக்களுடனும் சேர்ந்து தான் வைக்கவும், விடவும் வேண்டும் என்று விளக்கம் கூறினர்.

மஜ்மூ அல் ஃபதாவா – இப்னு தைமிய்யாஹ்(25/114)

https://islamqa.info/ar/answers/66176

هل يلزم من رأى هلال رمضان وحده أن يصوم ؟

من رأى هلال رمضان وحده ، أو رأى هلال شوال وحده ، وأخبر به القاضي أو أهل البلد فلم يأخذوا بشهادته ، فهل يصوم وحده ، أو لا يصوم إلا مع الناس ؟ في ذلك ثلاثة أقوال لأهل العلم :

القول الأول : أنه يعمل برؤية نفسه في الموضعين ، فيصوم في أول الشهر ويفطر في آخره منفرداً ، وهو مذهب الإمام الشافعي رحمه الله .

غير أنه يفعل ذلك سراً حتى لا يعلن بمخالفة الناس ، وحتى لا يؤدي ذلك إلى إساءة الظن به ، حيث يراه الناس مفطراً ، وهم صائمون .

القول الثاني : أنه يعمل برؤية نفسه في أول الشهر ، فيصوم منفرداً ، أما في آخر الشهر ، فلا يعمل برؤية نفسه وإنما يفطر مع الناس .

وهذا مذهب جمهور العلماء منهم ( أبو حنيفة ومالك وأحمد رحمهم الله ) .

وقد اختار هذا القول الشيخ ابن عثيمين رحمه الله ، قال : ” وهذا من باب الاحتياط ، فنكون قد احتطنا في الصوم والفطر . ففي الصوم قلنا له : صم ، وفي الفطر قلنا له : لا تفطر بل صم ” انتهى من الشرح الممتع ” (6/330) .

والقول الثالث : أنه لا يعمل برؤية نفسه في الموضعين ، فيصوم ويفطر مع الناس .

وإليه ذهب الإمام أحمد رحمه الله في رواية ، واختاره شيخ الإسلام ابن تيمية ، واستدل له بأدلة كثيرة ، قال رحمه الله : ” والثالث : يصوم مع الناس ويفطر مع الناس ، وهذا أظهر الأقوال ؛ لقول النبي صلى الله عليه وسلم : ( صومكم يوم تصومون ، وفطركم يوم تفطرون ، وأضحاكم يوم تضحون ) رواه الترمذي وقال : حسن غريب . ورواه أبو داود وابن ماجه وذكر الفطر والأضحى فقط . ورواه الترمذي من حديث عبد الله بن جعفر عن عثمان بن محمد عن المقبري عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال : ( الصوم يوم تصومون ، والفطر يوم تفطرون ، والأضحى يوم تضحون ) قال الترمذي : هذا حديث حسن غريب قال : وفسر بعض أهل العلم هذا الحديث فقال : إنما معنى هذا : الصوم والفطر مع الجماعة وعظم الناس ” انتهى من “مجموع الفتاوى” (25/114) .

Islamqa.info

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply