8. சில பெண்கள் மாதவிடாய்க்கும் உதிரப்போக்கிற்கும் வித்தியாசம் தெரியாமலிருக்கின்றனர். ஏனெனில் சில நேரங்களில் உதிரப்போக்கு நீடிக்கும்போது அந்தக்காலகட்டத்தில் தொழுகையை நிறுத்திவிடுகின்றார்கள். எனவே இது தொடர்பான சட்டமென்ன?
பதில்: மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண்மக்களுக்கு, பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் வெளியாகவேண்டுமென அல்லாஹ் விதித்திருக்கிற ஓர் உதிரப்போக்காகும். இவ்வாறு நபி(صلى الله عليه وسلم) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸும் வந்துள்ளது. (பார்க்க: புகாரி 305)
தொடர் உதிரப்போக்கு உடையவளுக்கு மூன்று நிலைகள் உள்ளன:
முதல் நிலை: முதன் முதலாக மாதவிடாய் வரும் போதே தொடர் உதிரப்போக்கு ஏற்படுவது.
இந்த நிலையிலுள்ள பெண் ஒவ்வொரு மாதமும் இரத்தம் வருவதைக் காணும்போது மாதவிடாய்க்காரியாக இருந்து கொள்ள வேண்டும். தூய்மையாகும் வரை தொழவோ, நோன்பு நோற்கவோ கூடாது. மேலும் அவளுடைய கணவன் அவளுடன் தாம்பத்திய உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்தச் சட்டம்பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி உதிரப்போக்கின் காலம் 15 நாட்கள் வரை இருந்தால்தான். அலலது அதற்கும் குறைவாக இருந்தாலதான். இந்த உதிரப்போக்கு 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்குமானால் அவள் தொடர் உதிரப்போக்கு உடையவளாவாள். மாதவிடாய்க்காரி அல்ல.
தொடர் உதிரப்போக்கையும் மாதவிடாயையும் அவளால் பிரித்தறிய முடியவில்லை என்றால் தனது உறவினர்களில் தன்னைப் போன்ற பெண்களுக்கு எத்தனை நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது என்பதை
விசாரித்து அறிந்து, மாதத்தில் ஆறு அல்லது ஏழு நாட்கள் தன்னை மாதவிடாய்க்காரியாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
ஒரண்டாவது நிலை: தொடர் உதிரப்போக்கையும் மாதவிடாயையும் அவளால் பிரித்தறிய முடிந்தால் மாதவிடாய் இரத்தம் கருப்பாக அல்லது துர்வாடை உடையதாக இருக்கும் என்பதை அறிந்து மாதவிடாய் இரத்தம் வரக்கூடிய காலங்களில் தொழுகை, நோன்பு, உடலுறவு முதலியவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் குளித்துவிட்டு தொழுது கொள்ள வேண்டும். இவ்வாறு அவள் பிரித்தரிந்து செயல்படூம்போது மாதவிடாய் 6 அலலது 7 நாட்களையும் தாண்டி 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது இரண்டாவது நிலை.
முன்றாவது நிலை: தொடர் உதிரப்போக்கு ஏற்படுவதற்கு முன் அவளுக்கு வழக்கமாக வந்து கொண்டிருந்த மாதவிடாய்க் காலத்தைத் தெரிந்திருப்பது. வழக்கமாக அவளுக்கு மாதவிடாய் ஏற்படக்கூடிய
அந்த நாட்களில் அவள் மாதவிடாய்க்காரியாக இருந்துகொண்டு பின்னர் குளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒவ்வொரு தொழுகைக்கும்- அதற்குரிய நேரம்வந்து விட்டால்: உளுச் செய்து கொள்ள வேண்டும்; இரத்தம் வந்து கொண்டிருந்தாலும் சரியே. மறுமாதம் வழக்கமான அவளுடைய மாதவிடாய் நாட்கள் வரும் வரை அவளிடம் அவளுடைய கணவன் தாம்பத்திய உறவை வைத்துக் கொள்ளலாம்.
இதுதான் தொடர் உதிரப்போக்கு உடையவள் குறித்து ஹதீஸ்களில் வந்துள்ளதன் அடிப்படையில் அமைந்தசுருக்கமான கருத்தாகும். இக்கருத்தையே புலூகுலமராம் என்ற நூலின் ஆசிரியர் ஹா.’.பிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் முன்தகா எனும் நூலின் ஆசிரியர் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களும் குறிப்பிட்டூுள்ளனர்.
-இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: