ஜும்ஆ அன்று இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் தொழுகையாளி கேட்க வேண்டிய பிரத்யோக துவாவோ,திக்ரோ உள்ளதா?இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் உரைநிகழ்த்துபவர் கேட்க வேண்டிய துவா என்ன?

கேள்வி:
ஜும்ஆ அன்று இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் தொழுகையாளி கேட்க வேண்டிய பிரத்யோக துவாவோ,திக்ரோ உள்ளதா?இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் உரைநிகழ்த்துபவர் கேட்க வேண்டிய துவா என்ன ?

பதில்:
அல்ஹம்துலில்லாஹ்…இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் கேட்க்கவேண்டுமென்ற பிரத்தேகமான துவாவும் திக்ரும் எதுவுமில்லை  ஆனாலும் தொழுகையாளி அந்த நேரம் பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படும் நேரம் என்பதால் விரும்பியதை கேட்கலாம்.

நபிﷺ   அவர்கள் கூறினார்கள்
_عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: «فِيهِ سَاعَةٌ، لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ، وَهُوَ يُصَلِّي، يَسْأَلُ اللهَ شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» زَادَ قُتَيْبَةُ فِي رِوَايَتِهِ: وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا_

அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர்ﷺஅவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

ஸஹிஹ் முஸ்லிம் 1543

அந்த நேரம் தொடர்பாக  வேறு அறிவிப்பில்

_عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ لِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ، سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ»_

அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், “வெள்ளி கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள்.நான் கூறினேன்:ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:அது, இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.
ஸஹிஹ் முஸ்லிம் :1546


இந்த நேரம் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரமாகும் எனவே அந்த நேரத்தை இம்மை மறுமை நன்மை வேண்டி பிரார்த்திப்பதற்க்காக பயன்படுத்த வேண்டும்  அதேபோன்று தான் இமாமும் இரண்டு உரைகளுக்கு மத்தியில் இம்மை மறுமை நன்மைக்காக ரகசியமான முறையில் பிரார்த்தனை செய்யலாம் அவ்வாறே ஜும்ஆ தொழுகையில் சுஜூதிலும் நபி ﷺ அவர்கள் கூறியதாக வந்துள்ள திக்ருகளை கூறியதற்கு பிறகு அவரது விருப்பம் போல் துவாவை கேட்டு கொள்ளலாம் அதேபோன்று தஷஹுதுடைய இருப்பில் ஸலாம் கூறுவதர்க்கு முன் ஒத வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ள துவாக்களை தொடர்ந்து விருப்பமான துவாக்களை கேட்டுகொள்ளலாம்.

மூலம் ஃபதாவா நூருன் அலல் தர்பு  ஷேகு ஸலிஹ் அல் உஸைமின் [எண் :02/08]

மொழிபெயர்ப்பு : பஷீர் ஃபிர்தெளஸி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

0 thoughts on “ஜும்ஆ அன்று இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் தொழுகையாளி கேட்க வேண்டிய பிரத்யோக துவாவோ,திக்ரோ உள்ளதா?இரண்டு குத்பாக்களுக்கு மத்தியில் உரைநிகழ்த்துபவர் கேட்க வேண்டிய துவா என்ன?”

Leave a Reply