கேள்வி
நான் சுய தேவைக்காக கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..?
பதில்
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
ஒரு துளி இரத்தம் (கசிந்தது) என்பது மாதவிடாய்க்கான அறிகுறி அல்ல. எனவே நோன்பையும் தொழுகையையும் விட்டுவிடக் கூடாது (தொடர வேண்டும்).
ரமழான் மாத நோன்பை மேற்கொண்டிருக்கும் பெண்ணிற்கு (மாதவிடாய் முடிந்த பிறகும்) சிறு இரத்தப் புள்ளிகள் தென்பட்டது. இது அம்மாதம் முழுவதும் காணப்பட்டது. எனவே அவளது நோன்பு செல்லுபடியாகுமா.?
_மேற்கண்ட கேள்வியானது ஷெய்க் ஸாலிஹ் அல்-உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது._
அதற்கு ஷேய்ஹ் அவர்களின் பதில்:
ஆம், (அந்த பெண்ணின்) நோன்பு செல்லுபடியானதாகும். இவ்வாறான ரத்தத் துளிகள் சாதாரணமாக நரம்பிலிருந்து வெளிப்படுவதாகும். எனவே அவைகளை கணக்கிலெடுக்க அவசியமில்லை.
நூல்: ஃபதாவா அல்-மர்’அதுல் முஸ்லிமா (1/137).
மேலும் ஷெய்ஹ் அவர்கள் கூறியதாவது:
பொதுவான அடிப்படை என்னவென்றால் ஒரு பெண்ணின் மாதவிடாய் முடிந்தவுடன், மாதவிடாய் (அல்லது) நிஃபாஸின் முடிவைக் குறிக்கும் ‘துஹ்ர்’ அல்லது வெள்ளைப்படுதலை அவள் நிச்சயமாகக் கண்டுகொள்வாள்.
அதன் பிறகு தோன்றும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்திலான எந்தவொரு (திரவ) வெளியேற்றமும், அல்லது இரத்தப் புள்ளிகள் அல்லது ஈரத்தன்மையும் மாதவிடாயாக கருதப்படாது.
எனவே அவள் தொழுகை அல்லது நோன்பை நிறுத்தக்கூடாது.
மேலும் அவள் கணவனுடன் இல்லறத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறாள். ஏனெனில் அது மாதவிடாய் இல்லை.
பார்க்க : ஸுஆலன் ஃபில் ஹைழ்ழூ , 60
அல்லாஹ்வே மிக அறிந்தவன்!
அரபி மூலம்: Islamqa.info