சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை ) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள்

சரியான அகீதாவிலிருந்து (இஸ்லாமிய கோட்பாட்டை) மீறுவதை பாதுகாக்கும் 13 விதிகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1- இபாதத் (வழிபாடு )என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு முற்றிலும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகும், ஆக அல்லாஹ்விற்கு நிறைவேற்றப்படும் வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மிகவும் நெருங்கிய மலகுக்கோ ( வானவருக்கோ )அல்லது அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கோ (தீர்க்கதரிசிகள்) அல்லது ஒரு ஸாலிஹான இறைநேசருக்கோ நிறைவேற்றப்படக்கூடாது (பயம் மற்றும் நம்பிக்கை ,ஆசை போன்றவை, அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்)

 

– மேல் காணும் இந்த விதியின் அடிப்படையில் அல்லாஹ்வின் பெயரில் மட்டுமே சத்தியம் செய்ய முடியும்

உம் : வல்லாஹி, பில்லாஹி,தல்லாஹி

(அல்லாஹ்வின் மீது ஆணையாக)

 

2- அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டிய ஒரு விஷயத்தில் அல்லாஹ்வை தவிர மற்றவர்களிடம் (மரணித்த நல்லடியார்களிடம்) உதவி தேடும் நபர் ஷிர்கை( பல தெய்வ வழிபாட்டை) செய்து இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்.

-அல்லாஹ்விடம் மட்டுமே பாதுகாவல் தேட வேண்டிய ஒரு விஷயத்தில் அல்லாஹ்வை தவிர மற்றவர்களிடம் (மரணித்த நல்லடியார்களிடம்) பாதுகாவல் தேடுபவர் ஷிர்கை (பல தெய்வ வழிபாட்டை) செய்து இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்.

 

3- சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் நன்மையைக் கொண்டுவரவோ அல்லது தீமையைத் தடுக்கவோ முடியாது என்று ஆழமாக நம்புதல்

 

4-ஷிர்கான தகடு தாயத்துக்கள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டவை என்று அறிஞர்களால் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது,

 

ஆனால் அவை குர்ஆனிலிருந்து எடுத்து எழுதப்பட்ட தாயத்துக்களைப் பற்றி கருத்துகள் அறிஞர்களிடத்தில் வேறுபடுகின்றன,

 

ஆனால் நடைமுறையில் உள்ள இந்த பழக்கவழக்கங்களினால் கொஞ்சம் கொஞ்சமாக ஷிர்க்கான தாயத்துகளையும் அணிவதற்கு வழிவகுக்கும் என்பதால் سد للذرائع ஸத்துன் லித்தராயிஃ என்ற விதியின் அடிப்படையில் குர்ஆனிய தாயத்துகளையும் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது.

 

இப்னு மசூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டேன்: மந்திரிப்பது, தாயத்துக்கள் , மாந்திரீகங்கள் (சூனியம்)என்பது இணை கற்பித்தலாகும் .

நூல் 📚 – அஹ்மத் , அபூ தாவூத்,

 

தாயத்துக்கள் என்பது கண் திருஷ்டிக்காக குழந்தைகளின் கழுத்தில் தொங்கவிடும் ஒரு கயிறு, தகடுகளில் புரியாத வார்த்தைகளால் மார்க்கத்திற்கு முரணான வார்த்தைகளால் எழுதப்பட்டு கழுத்தில் கட்டிக் கொள்வது.

5- மார்க்க விடயங்களில் மிகைப்படுத்தாமல் – غلو ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், உங்களுக்கு முன் வந்தவர்கள் மார்க்கத்தில் தீவிர மிகைப்படுத்தலால் அழிக்கப்பட்டனர்.

உம் – இறை நேசர்களை சஹாபாக்களை விட உயர்த்தி பேசுவது, இறைநேசர்களை இறைத்தூதர் ﷺ அவர்களை காட்டிலும் உயர்வாக பேசுதல்.

இறைத்தூதர் ﷺ அவர்களை அல்லாஹ்வுக்கு நிகராக பேசுதல்.

6- திருக்குர்ஆனிலும் , இடம்பெற்றிருக்கும் அல்லாஹ்வின் பண்புகளைத் தவிர வேறு எதையும் அவனுடன் இணைக்காதீர்கள், இறைத் தொடர்புடைய அவனது செயல்களுடன் யாரையும் தொடர்புபடுத்தாதீர்கள்.

 

உம்-, “அல்லாஹ்வின் அருளாலும் வேறொருவராலும் என்று கூறக்கூடாது, “அல்லாஹ்வின் கிருபையால்” என்று மட்டும் சொல்லுங்கள்.

7-காலத்தை சபிக்கிறவன், அல்லாஹ்வை பழிக்கிறான்‌

உம் -இந்த காலத்தில் இந்த நேரத்தில் இவ்வாறு நடந்திருக்க கூடாது , இந்த நேரத்தில் இவ்வாறு செய்யக்கூடாது

8- சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் மறைமுகமான ஞானம் இருப்பதாக கற்பிக்க வேண்டாம் .

உம் – அல்லாஹ்வைப் போன்று இறைத்தூதர்களுக்கும் இறைநேசர்களுக்கும் மறைமுகமான ஞானம் இருப்பதாக நினைப்பது.

9- அல்லாஹ்விடம் இருந்து முற்றிலும் வேறுபடுத்தக்கூடிய வார்த்தைகளால் அல்லாஹ்வை விவரிக்கும் எந்த சொற்றொடரும் அனுமதிக்கப்படாது.

உம்-உருவமற்ற அல்லாஹ், வானில் இல்லாத அர்ஷில் இல்லாத என்று கூறுவதைப் போல.

10- படைப்பாளருக்குக் கீழ்ப்படிவதைப் போன்று படைப்புகளுக்கு கீழ்ப்படியக் கூடாது, அல்லாஹ்விற்கு கீழ் படிவதைப் போன்று ஒரு அரசிற்கோ அல்லது அரசியலமைப்புக்கோ கீழ்ப்படிதல் இல்லை,

அல்லாஹ் அனுமதித்த விஷயத்தில் ஆட்சியாளருக்கும் தாய் தந்தையர்களுக்கும் கட்டுப்படுதல் என்பது அவசியம். ஆனால் அவர்களுக்கு கட்டுப்படுகிறேன் என்ற பெயரில் அல்லாஹ்விற்கும், மார்க்கத்திற்கும் மாறுபடக்கூடாது.

11- பரக்கதை (அபிவிருத்தியை / ஆசிர்வாதத்தை) தேடுவது என்பது மார்க்கம் சொல்லிய அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும், அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பம்சம், நபியவர்களை வேறு யாருடனும் ஒப்பிடவோ அல்லது பரக்கத் தேடுவதை அனுமதிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை.

உம்-நபி அவர்களின் காலத்தில் அவர்களின் பரக்கத் பெற்ற வியர்வை அவர்கள் உளூ செய்த தண்ணீர், உமிழ்நீர் பரக்கத்தாக நபித்தோழர்கள் பயன்படுத்தினார்கள்.

ஆனால் அதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு ஷேகுமார்களின் பரக்கத்தை அடைகிறேன் என்று ஒருவர் முயற்சி செய்தால் அது அவருக்கு பாதகமாக மார்க்கத்தில் அமைந்து விடும் அவருக்கு அனுமதி இல்லை இவ்வாறு செய்வதற்கு.

எந்த விஷயங்களில் பரக்கத் இருப்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனிலும் நபி மொழியிலும் கூறியிருக்கிறானோ அவைகளில் மட்டும்தான் பரக்கத் இருக்கும் அது வேறொருவருக்கு தனது பரக்கத்தை தராது.

உம்- ஜம்ஜம் தண்ணீர் -அதை அருந்துவதற்கு மார்க்கம் சொல்லி இருக்கிறது ஆனால் அதை வீட்டின் மூளைகளில் பரக்கத் பெறுவதற்காகவும், சைத்தான்களை விரட்டடிப்பதற்காகவும் பயன்படுத்துவது , பரகத் பெறுவதற்காக அதில் உளூ செய்வது அனாச்சாரம் / பித்அத் ஆதாரம் இல்லை.

(ஒருவர் தண்ணீர் இல்லாமல் ஜம்ஜம் தண்ணீரில் உழூ செய்தால் கூடும்)

12- குறி சொல்பவரிடம் சென்று அவர் சொல்வதை நம்புபவர் அல்லாஹ் இறக்கி அருளி இருக்கிற இந்த மார்க்கத்தை நிராகரித்தவராவார்.

(சேகுமார்களிடம் சென்று எதிர்காலத்தில் இவ்வாறு நடக்கும் என்று அறியாமையில் நம்புவது மார்க்கத்தில் கடுமையாக கண்டிக்கப்பட்டு இருக்கிறது)

13- மார்க்கத்திலிருந்து அறியப்பட்ட ஒன்றைத் நன்கு அறிந்தே ஒரு முஸ்லிம் மறுத்தால் அவர் இறை மறுப்பாளராக விடுகிறார்.

உம்- கடமையான மார்க்கத்தில் வலியுறுத்தி சொல்லப்பட்ட விஷயங்களில் விமர்சனம் செய்தல் கேளி பரிகாசம் செய்தல் , ஹிஜாபை கிண்டல் செய்தல், ஹராம் ஹலாலை விமர்சித்தல் போன்றவைகள்.

மூலம்- ஷேக் வலீத் அல்-சயீதான் ஹஃபிழஹுல்லாஹ் அவர்களின் சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கள்.

 

 

-தமிழில்

உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply