கண்களை மூடிக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன?

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم

கண்களை மூடிக்கொண்டு தொழுவதன் சட்டம்

எங்களது ஷெய்க். முஹம்மது இப்னு ஹிஸாம் (حفظه الله) அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது…

கேள்வி : கண்களை மூடிக்கொண்டு தொழுபவரின் (மார்க்கச்) சட்டம் என்ன.?

ஷெய்க் அவர்களின் பதில் :

இவ்வாறான செயல் நபி ﷺ அவர்களது வழிகாட்டலுக்கு முரணானது. நபி ﷺ அவர்கள் தமது கண்களை திறந்த நிலையிலே தொழுதுள்ளார்கள். கண்களை மூடிக்கொண்டு தொழுததாக எவ்வித அறிவிப்புகளும் இல்லை. எனவே எவ்வித காரணங்களுமின்றி கண்களை மூடிக்கொண்டு தொழுவது பித்அத் (புதுமையான செயல்) என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

கவனச்சிதறல் காரணமாக அல்லது பயபக்தியை தடுக்கும் விரிப்பு மற்றும் சுவரினுடைய அலங்காரத்தின் காரணமாக ஒருவர் தம் தொழுகையில் கண்களை மூடிக்கொள்வதை பொறுத்தமட்டில், அவர் மீது எவ்வித தவறும் இல்லை.

அதே சமயம் கண்களை மூடித் தொழுவதை வணக்க வழிபாட்டின் ஓர் அம்சமாக கருதுவது, இவ்வாறு தொழுவது அதிக பயபக்தியை தரும் என்று மக்களில் சிலர் நம்புவதைப் பொறுத்தமட்டில், இவ்வாறான செயற்பாடுகள் உண்மையாக இருந்திருந்தால் அதனை நபி ﷺ அவர்களும், நபித்தோழர்களும் நமக்கு முன்பு செய்துகாட்டியிருப்பார்கள். (ஆனால் அவ்வாறு எந்த வழிகாட்டலுமில்லை)

_அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்_ ____________________________

Translated by (Arabic – English) :
_Abu Ishaq Muḥammad Ibn Ahmad Ba ‘Alawi_

Original fatwa :
https://t.me/ibnhezam/8917

குறிப்பு :

_இமாம் இப்னுல் கைய்யிம் رحمه الله அவர்கள் இவ்விடயத்தில் கூறுவதாவது …_

“ஒரு மனிதன் கண்களைத் திறப்பதன் மூலம் தன் தொழுகையில் முழுமையாக கவனம் செலுத்த முடியுமானால், அவ்வாறு செய்வது அவருக்கு நல்லது. அதேசமயம் அவரது தொழுகையை விட்டும் அவரை திசைதிருப்பக்கூடிய விடயங்கள் இருந்தால், கண்களை மூடுவதன் மூலம் அவர் தனது தொழுகையில் இன்னும் முழுமையாக கவனம் செலுத்த முடியுமானால், அவ்வாறே செய்துகொள்ளலாம்; அது ‘மக்ரூஹ்’ அல்ல..!

زاد المعاد 1/283 : ஆதாரம்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply