ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொலலப்படூம்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அலலது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா?

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொல்லப்படும்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா?

“நடப்புத்‌ தொழுகை தவறிவிடுமென அஞ்சினால்‌ (தவறிப்போன தொழுகையைத்‌ தொழுது விட்டுத்தான்‌ அடுத்த தொழுகையைத்‌ தொழவேண்டும்‌ என்கிற) வரிசைக்கிரமத்தைப்‌ பேண வேண்டியதில்லை” என்று பிக்ஹு கலை அறிஞர்கள்‌ கூறியிருப்பதன்‌ கருத்‌தென்ன? ஜமாஅத்‌ தவறிவிடூம்‌ எனப்‌ பயந்தால்‌ வரிசைக்‌கிரமத்தைப்‌ பேண வேண்டிய அவசியமில்லையா?

பதில்‌: தொழுகைகளை நிறைவேற்றும்போது வரிசைக்‌ கிரமமாகத்‌ தொழுவது அவசியம்‌ என்பதால்‌ ளுஹரை நிய்யத்‌ செய்து கொண்டு அவர்‌ அஸர்‌ ஜமாஅத்துடன்‌ சேர்ந்துவிட வேண்டும்‌. பின்னர்‌ அஸரை தனியாகத்‌ தொழ வேண்டும்‌. ஜமாஅத்‌ தவறிவிடுமெனப்‌ பயந்தாலும்‌ வரிசைக்கிரமம்‌ தவறக்கூடாது.

“நடப்புத்‌ தொழுகையின்‌ நேரம்‌ தவறிவிடுமென அஞ்சினால்‌ வரிசைக்கிரமத்தைப்‌ பேண வேண்டியதில்லை” என்று பிக்ஹா கலை அறிஞர்கள்‌ கூறியதன்‌ கருத்து என்னவெனில்‌, ஒருவருக்கு ஒரு தொழுகை
தவறிவிட்டால்‌ நடப்புத்‌ தொழுகையைத்‌ தொழுவதற்கு முன்‌ முதலில்‌ தவறிப்போனதைத்‌ தொழ வேண்டும்‌. நடப்புத்‌ தொழுகையை நிறைவேற்றுவதற்கு நேரம்‌ குறுகியதாக இருந்தால்‌ முதலில்‌ நடப்புத்‌ தொழுகையைத்‌ தொழுதுவிட வேண்டும்‌. அதன்‌ பிறகு தவறிப்போன தொழுகையைத்‌ தொழ வேண்டும்‌.

-இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: