உழ்ஹிய்யா குறித்த சில கேள்வி பதில்கள்

1.இடது கையால் குர்பானிப் பிராணியை அறுப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு :

கேள்வி :

நான் இடக்கை வழக்கமுடையவன்…. இடக்கையால் குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட்டால் அது கூடுமா ?

இமாம் இப்னு பாஸ்z (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பதில் :

நீங்கள் அவ்வாறு இடக்கையால் அறுத்தாலும் அது கூடும்.

இமாம் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலிருந்து
http://www.binbaz.org.sa/noor/10976

மொழியாக்கம் :

முஹம்மத் அத்னான் முராத் {السلفي }

2.உழ்ஹிய்யா இறைச்சியை எப்படி பங்கிடுவது????

இமாம் இபின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

உழ்ஹிய்யாவிற்காக அறுக்கப்பட்ட பிராணியிலிருந்து தானும் உண்டு, உறவினர்கள் -அண்டை வீட்டாருக்கு ஹதிய்யாவும் கொடுக்கலாம். இன்னும் அதிலிருந்து ஸதகாவும் கொடுக்கலாம்.

நூல் : மஜ்மூஉல் பதாவா (18/38)

மொழியாக்கம் : ரஸீன் அக்பர் மதனி

3.குர்பாணிக்கு பெண் விலங்குகளை பயன்படுத்த முடியுமா?

இமாம் இப்னு பாஸ்z (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

உழ்ஹியாவுக்கு (குர்பாணிக்கு) ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற மிருகங்களில் குர்பாணிக்கான வயதைப் பூர்த்தி செய்த ஆண் மற்றும் பெண் மிருகங்களைப் பயன்படுத்தலாம்….

இமாம் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் :

http://www.binbaz.org.sa/noor/2783

மொழியாக்கம் :

முஹம்மத் அத்னான் முராத் { السلفي }

4.உழ்ஹிய்யா இறைச்சி சமைத்தா அல்லது சமைக்காமலா பங்கிடுவது ????

கேள்வி : உழ்ஹிய்யாவிற்குரிய இறைச்சியை சமைத்தா அல்லது சமைக்காமலா பங்கிடுவது ????

பதில் : உழ்ஹிய்யாவிற்குரிய இறைச்சியை சமைக்காமல் தான் பங்கிடவேண்டும்.

நூல் : மஜ்மூஉல் பதாவா -இப்னு உஸைமீன்- (25/132)

மொழியாக்கம் : ரஸீன் அக்பர் மதனி

5.உழ்ஹிய்யாவிற்கான சிறந்த பிராணி எது????

கேள்வி : உழ்ஹிய்யாவிற்காக அறுக்கப்படும் பிராணியில் சிறந்தது எது???ஆடா அல்லது மாடா??

பதில் : உழ்ஹிய்யாவிற்காக ஆடறுப்பதுதான் சிறந்தது. என்றாலும் மாடு அல்லது ஒட்டகத்தை அறுத்தாலும் பரவாயில்லை.

நூல் : மஜ்மூஉ பதாவா -இப்னு பாஸ்- (18/43)

மொழியாக்கம் : ரஸீன் அக்பர் மதனி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply