இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

5.ஸுன்னா என்பது இறைத்தூதர்‌ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையாகும்‌ என்பதே அஹ்லுஸ்‌ ஸுன்னாவினரின்‌ கருத்தாகும்‌.

6. மேலும்‌, ஸுன்னா என்பது அல்குர்‌ஆனின்‌ விளக்கவுரையுமாகும்‌. அதாவது, ஸுன்னா அல்குர்‌ஆனை விளக்குகின்ற ஆதாரங்களாகும்‌.

7. மேலும்‌, ஸுன்னாவில்‌ இல்லாத விடயங்களை (கியாஸ்‌)”ஒப்பீட்டாய்வு” அடிப்படையில்‌ ஸுன்னாவுடன்‌ சேர்க்கக்‌ கூடாது.

விளக்கம்‌:

இங்கு ஸுன்னா என்பதன்‌ மூலம்‌, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ வழிமுறையே கருதப்படுகின்றது. அவர்கள்‌ சம்பந்தமான வழிமுறைகள்‌ வழி, வழியாக, தொன்று தொட்டு ஆதாரங்களின்‌ அடிப்படையில்‌ இடம்‌ பெற்றுள்ளன. அவை அல்குர்‌ஆனை விளக்கும்‌ விரிவுரையுமாகும்‌. அதாவது, அல்குர்‌ஆனைத்‌ தெளிவு படுத்துமாறு, அல்லாஹ்‌ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குக்‌ கட்டளையிட்டான்‌.

அல்லாஹ்‌ கூறுகின்றான்‌:

(நபியே! மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர்‌ அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்‌. .

(அந்‌-நாஹ்ல்‌: வசனம்‌: 44)

ஸுன்னா என்பதில்‌ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்‌ சொல்‌, செயல்‌, அங்கீகாரம்‌ ஆகிய அனைத்தும்‌ உள்ளடங்கும்‌. இவற்றைப்‌ பின்பற்றுமாறு இஸ்லாமிய ஷரீஅத்‌ வலியுறுத்துகின்றது. மேலும்‌, இவை அல்குர்‌ஆனின்‌ கருத்துக்களுக்கு (விளக்கவுரையும்‌) தெளிவுரையாகவும்‌ இருக்கின்றது. இவைகளுடன்‌ பொருத்தமில்லா எதையும்‌ இணைக்காது, இவற்றுடன்‌ நிறுத்திக்கொள்ள வேண்டும்‌.

இதுவே, ஸுன்னாவுடன்‌ ஒப்பீட்டாய்வு செய்யக்‌ கூடாது என்பதன்‌ மூலம்‌ கருதப்படுகின்றது. ஆனால்‌, ஸுன்னாவின்‌ அடிப்படைகளுக்கும்‌, சட்ட விதிகளுக்கும்‌ இசைவாக அமைந்த தெளிவான விடயங்கள்‌ ஸுன்னாவில்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படும்‌.

இங்கு “கியாஸ்‌” என்பதால்‌ கருதப்படுவது, ஸுன்னாவில்‌ இடம்பெறாத ஒரு விடயத்தை ஸுன்னாவுடன்‌ இணைத்துவிட்டு, அது ஸுன்னாவைச்‌ சார்ந்தது என்றும்‌, அது ஸுன்னாவில்‌ வெளிப்படையாக இடம்பெற்றுள்ளது என்றும்‌ கூறுவதாகும்‌.

எனினும்‌, இங்கு குறிப்படப்பட்டுள்ள கியாஸ்‌ என்பது, ஸுன்னாவில்‌ தெளிவான ஆதாரங்கள்‌ கிடைக்காத பட்சத்தில்‌ , (பிக்ஹ்‌) சட்ட நூற்களில்‌ கையாளப்பட்டுள்ள கியாஸ்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டமாட்டாது.

எனவே, ஒரு மனிதன்‌ ஸுன்னாவில்‌ இடம்பெற்ற விடயங்களுடன்‌ மாத்திரம்‌ தனது வாழக்கையைச்‌ அமைத்துக்‌ கொண்டால்‌, அதுவே போதுமானதாகும்‌. மேலும்‌, ஸுன்னாவில்‌ அடங்காத விடயங்களை ஒருவர்‌

அதிகப்படுத்தினால்‌ அல்லது அதனுடன்‌ இணைத்தால்‌ அவர்‌ பித்‌அத்‌ செய்தவர்‌ ஆவார்‌. இஸ்லாத்தில்‌ இல்லாத நவீன அனுஷ்டானங்கள்‌ அனைத்தும்‌ பித்‌அத்‌

ஆகும்‌. அனைத்து பித்‌அத்களும்‌ வழிகேடாகும்‌. இந்த விடயம்‌ பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

பித்‌அத்காரர்‌ வழிகெட்டவர்‌ என்பதன்‌ கருத்தாவது, அவர்‌ தவறிழைத்தவரும்‌, நேர்வழியறியாது தட்டுத்‌ தடுமாறுபவரும்‌ ஆவார்‌. நபிவழியைக்‌ கடைப்பிடித்து அதனைப்‌ பின்பற்றுபவர்‌ தவறிழைக்காதவராவார்‌. மேலும்‌, நேர்வழியிலும்‌, அல்லாஹ்விடமிருந்துள்ள ஒளியின்‌ மீதும்‌ இருப்பவருமாவார்‌.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply