அகீதாவில் கவனம் செலுத்துவது குறித்த இளைஞர்களுக்கான உபதேசம்…!

கேள்வி:

தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் இஸ்லாமிய கொள்கையை (அகீதாவை) கற்பதில் பாராமுகமாக இருக்கின்றனர். அத்துடன், வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இந்த வாலிபர்களுக்கு நீங்கள் என்ன உபதேசம் செய்ய விரும்புகிறீர்கள்??

பதில்:
“எல்லா விடயங்களுக்கும் முன் முதலில் கொள்கையில் (அகீதாவில்) கவனம் செலுத்துமாறு வாலிபர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் உபதேசம் செய்கின்றேன்.
ஏனெனில், அதுவே (இஸ்லாத்தின்) அத்திவாரமாகும். அதன் மீது தான் அனைத்து அமல்களும் கட்டியெழுப்பப்படுகின்றன.
எனவே, அகீதா சரியானதாக இருப்பதோடு மனத்தூய்மையுடனும், நபி -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்களைப் பின்பற்றியும் செய்யப்படும் ஒரு அமலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். (அதற்கு மாறாக) வழிகெட்ட, இணைவைப்புக் கொள்கையில் ஒருவர் இருந்து கொண்டு, மனத்தூய்மையுடன் எப்படிப்பட்ட அமலை செய்தாலும் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டான்.”

பதிலளித்தவர்:அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹபிதஹுல்லாஹ்

பார்க்க:
“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة” (பக்கம்:97-100)

மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: