அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா?

கேள்வி: அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா? அதற்க்கு என்ன ஆதாரம்? இதில் சரியான கருத்து என்ன?

பதில்:

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துப்படி ஆஃகிரத்தில் அல்லாஹ்வை பார்பது என்பது உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும்.

கியமாத் நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா).

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ ۝٢٢

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ ۝٢٣

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

மேலும் கூறுகிறான்:

۞ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَةٌۭ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ ۚ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ ۝٢٦

நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி صل الله عليه وسلم  “அல்லாஹ்வை பார்ப்பது” என்று விளக்கம் கூறியுள்ளார்கள். மற்றோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் மூமின்கள் அல்லாஹவை சுவனத்தில் பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

இந்த உலகத்தை பொறுத்தவரை இறைவனை யாராலும் காண முடியாது.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

لَّا تُدْرِكُهُ ٱلْأَبْصَٰرُ وَهُوَ يُدْرِكُ ٱلْأَبْصَٰرَ ۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ ۝١٠٣

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.

மேலும் மூஸாவிடம் கூறினான்:

لَن تَرَانِي
நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது.

ஓர் ஆதாரப்பூர்வமான ஹதீஸில், “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹவை மரணத்திற்கு பின்னே அன்றி யாராலும் பார்க்க முடியாது.” என நபி صل الله عليه وسلم  கூறியுள்ளார்கள்.

ஏனென்றால் அல்லாஹ்வை பார்பது தான் சுவனவாசிகள் பெரும் இன்பத்திலேயே மிகப்பெரிய இன்பமாகும். இந்த உலகம் இன்பத்திற்கான உலகம் இல்லை. இது சிரமங்கள், சுமைகள், சோதனைகளுக்கான உலகம்.

ஆகையால் இந்த உலகத்தில் அல்லாஹவை காண முடியாது, மறுமையில் மூமின்கள் அல்லாஹவை பார்ப்பார்கள்.

காஃபிர்களை பொறுத்தவரை, அவர்கள் அல்லாஹ்வை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்

இறைவன் கூறுகிறான்:

كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ ۝١٥

(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.

 

–ஷேக் இப்ன் பாஸ் رحمه الله

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply