கேள்வி:
ஃபஜ்ர் அல்லது மக்ரிப் இவற்றில் எது நாளுடைய ஆரம்பம்?
எது நடுத் தொழுகை? நடுத்தொழுகை அஸ்ர் என்றால், ஃபஜ்ர் என்பது நாளின் ஆரம்பம் இல்லையா?
குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருந்து எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
பதில் :
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடுத் தொழுகையைக் அறிவோம்…
“தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்”
[அல்-பகரா 2:238]
இது அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்றாகும்.
ஹாஃபிழ், இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரியில் (8/197) தோராயமாக 20 கருத்துக்கள் இவ்விடயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்கள்.
ஹாஃபிழ் அப்துல் முஃமின் அல்-திம்யாதி (ரஹிமஹுல்லாஹ்) கஷ்ஃப் அல்-முகத்தா ஃபி தபியீன் அல்-சலாத் அல்-வுஸ்தா என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இவ்விடயம் குறித்த வலுவான இரண்டு கருத்துகளை கூறியுள்ளார்.
1. அது ஃபஜ்ர் தொழுகை :
இது அபு உமாமா, அனஸ், ஜாபிர், அபுல்-ஆலியா, உபைதா இப்னு உமைர், அதாஃ, இக்ரிமா, முஜாஹித் மற்றும் பிற மார்க்க மேதைகளது நிலைபாடாகும்; மேலும் இது இப்னு உமர் மற்றும் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் இரண்டு நிலைபாடுகளில் ஒன்றாகும்.
இதுவே இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாஃபிஈ ஆகியோர்களின் நிலைபாடாகவும் உள்ளது.
📝 பார்க்க: ஃபத்ஹுல் பாரி (8/196)
2. அது ‘அஸர் தொழுகை :
குர்ஆன் மற்றும் சுன்னாவில் அதற்கான சான்றுகள் அதிகமாக இருப்பதால், பெரும்பாலான அறிஞர்களின் கருத்து இதுதான்.! மேவும் இதுவே சரியான நிலைபாடாகும்.
அலி இப்னு அபீ தாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருத்தும் இதுதான்..!
ஸுர் இப்னு ஹுபைஷ் அவர்கள் கூறுவதாக இமாம் திர்மிதி மற்றும் நஸாயீ ஆகியோர் அறிவிப்பதாவது : நாங்கள் உபைதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் நடுத் தொழுகையைப் பற்றி அலி(ரழியல்லாஹு அன்ஹு)யிடம் கேளுங்கள் என கூறினோம். பிறகு அவரிடம் கேட்டுவிட்டு இவ்வாறு எங்களிடம் கூறினார்கள் :
அல்-அஹ்ஸாபின் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்வதை நான் கேட்கும் வரையிலும், ஃபஜ்ர் தான் நடுத்தொழுகை என நாங்கள் நினைத்தோம்.
“ஆனால் நபி அவர்கள் அஹ்ஸாபின் போது எங்களிடம் கூறியதாவது : “எதிரிகள் நடுத் தொழுகையான அஸரை விட்டும் நம்மை திசை திருப்பிவிட்டார்கள்.”
(பார்க்க : ஸஹுஹுல் புகாரி 4111)
நபியவர்களின் மேற்கண்ட ஹதீஸிலிருந்து அஸ்ர் தான் நடுத்தொழுகை என விளங்குகிறது.ஹதீஸில் அஸர் என்று வார்த்தை உள்ளது.
நடுத்தொழுகையானது ஃபஜ்ர் தான் என்ற வாதம் வலுவாக உள்ளது. ஆனாலும், அது ‘அஸர்’ என்பதுதான் சரியான நிலைபாடாகும்; இதுதான் இப்னு மஸ்ஊத் மற்றும் அபு ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிலைபாடாகும், மேலும் இமாம் அபுஹனீபா, இமாம் அஹ்மது பின் ஹம்பல் ஆகியோரிடத்தில் இதுவே சரியான நிலைபாடாகும். மேற்கூறப்பட்ட ஹதீஸுடைய தன்மையின் காரணமாக ஷாஃபி மத்ஹபை சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட நிலைபாடும் இதுவே..!
இதுவே ஸஹாபாக்களில் காணப்பட்ட பெரும்பாலான அறிஞர்களின் கருத்து என்பதாக இமாம் திர்மிதி அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது பெரும்பான்மையான தாபியீன்களின் கருத்து என இமாம் அல்-மவர்தி அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் இது பெரும்பாலான ஹதீஸ் அறிஞர்களின் கருத்து என இமாம் இப்னு அப்துல் பர் (ரஹிமஹுல்லாஹ்)
அவர்களும் கூறியுள்ளார்கள்.
மாலிக் மதஹபுகளில், இப்னு ஹபீப், இப்னுல்-அரபி மற்றும் இப்னு அதிய்யா ஆகிய அறிஞர்களது நிலைபாடாகும் இதுதான்.!
📝பார்க்க : ஃபத்ஹுல்-பாரி 8/196.
இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஸஹீஹான ஹதீஸ்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் (நடுத்தொழுகை என்பது) “அஸ்ர்” தான். இதுவே விருப்பமான நிலைபாடாகும்.
📝 பார்க்க : அல்-மஜ்மூ’, 3/61
ஹாஃபிழ் அல்-திம்யாதி ‘ அவர்கள் அஸ்ர் தொழுகையின் தனித்துவமான சில சிறப்புகளை (ஹதீஸ்களிலிருந்து) எடுத்துக் கூறும்போது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் அதை (அஸர் தொழுகையை) தவறவிடுவதால் ஏற்படும் பேரழிவை வலியுறுத்தி, அதை குடும்பம் மற்றும் செல்வத்தின் இழப்பு என்று கூறியுள்ளார்கள்.
‘யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்” என நபி(ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அஸர் தொழுகை தவறியவரின் நற்செயல்கள் அழிந்து போகின்றன.
மேலும் அஸர் தொழுகையானது தங்கள் சுய தேவையை விடவும், பெற்றோர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் செல்வத்தை விடவும் அவர்களுக்குப் பிரியமானதாக இருந்தது.
அச்ச நேர தொழுகை பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் இதுவே முதல் தொழுகையாகும்.
நபி (ஸல்லல்லாஹு ‘அலைஹிவ ஸல்லம்) அவர்கள் கஅபாவை நோக்கி(திரும்பி)ய நேரத்தில் இதுவே முதல் தொழுகையாகும்.
நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அஸருக்குப் பிறகு ஒரு பொருளை விற்க முயற்சிக்கிறான்…”.
இங்கு அஸர் தொழுகைக்குப் பிறகு செய்யப்படும் சத்தியப் பிரமாணத்தின் தீவிரத்தை அல்லாஹ் காட்டியுள்ளான்.
சுலைமான் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் குதிரைகளை பற்றி ஆய்வு செய்தார்கள். அச்செயல் அவரை சூரியன் மறையும் வரை அஸர் தொழுகையிலிருந்து திசை திருப்பியது. எனவே தமது ஏராளமான குதிரைகளை அழித்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் 1. “வல்-அஸ்ர் (காலத்தின் மீது சத்தியமாக) 2. நிச்சயமாக, மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்…”
[அல்-‘அஸ்ர் 103:1-2]
அஸர் தொழுகைதான் ஃபர்ழான தொழுகைகளில் நடுத் தொழுகையாக இருந்தது, ஏனென்றால் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை ‘ஃபஜ்ர்’ மற்றும் கடைசியாக கடமையாக்கப்பட்ட தொழுகை ‘இஷா’, எனவே கடமையாக்கப்படுவதில் நடுத்தொழுகை அஸர் தான்.
📝 பார்க்க : கஷ்ஃப் அல்-முக்தா, பக்கம் : 126-132
நாளின் ஆரம்பம் எது (?) என்பதை பொறுத்தமட்டில், அது இரவிலா அல்லது பகலிலா எனும் கேள்வியில்,
பகலுக்கு முன் இரவு வருகிறது என்பதுதான் பதிலாகும். எனவே சூரியன் மறைந்ததும் மறுநாள் இரவு ஆரம்பமாகிவிட்டது. எனவேதான், ரமழானின் பிறை காணப்பட்டால், மக்கள் அன்றிரவு தராவீஹ் தொழுவார்கள், ஏனெனில் அந்த இரவு ரமழானின் ஒரு பகுதியாகும், மேலும் ரமழானுடைய முடிவில் பிறையை காணும்போது, அப்பிறை ஷவ்வாலின் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்கள் தராவீஹ் தொழுவதில்லை.
மேற்கண்ட விளக்கத்தை மேற்கோள் காட்டி ஃபஜ்ர் தான் நடுத்தொழுகை என்று கூற முடியாது; அஸரை நடுத்தொழுகை என்று நாம் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால் “அஸர் சிறப்பை வைத்தே அவ்வாறு கூறுகிறோம்.” மற்றபடி இங்கே கூறப்பட்ட நடுத்தொழுகை எனும் வார்த்தை ‘இரு தொழுகைகளுக்கு இடையிலான நடுப்பகுதி என்று அர்த்தத்தில் கூறப்படவில்லை.
📝 பார்க்க : அல்-தஹ்ரீர் வல்-தன்வீர், 15/253; இமாம் இப்னு உதைமீன் அவர்களுடைய தஃப்சீர் ஸுரதுல் பகரா, 2/178.
மேலும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
Source:IslamQA
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: