🔸 *ரமதானை எதிர்நோக்குபவர்களுக்கு ஒரு அழகிய உபதேசம் – அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்*🔸
📩 கேள்வி:
ரமதான் மாதம் நெருங்கி வருவதை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு உங்களுடைய உபதேசம் என்ன? அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக.
📝 பதில்:
(இத்தருணத்தில்) கடமையாவது என்னவென்றால் ஒரு முஸ்லிம், அல்லாஹ் அவரை இந்த மாதத்தை அடையச் செய்யவும், மேலும் அவருக்கு அதன் நோன்பை (நோற்றிட), (அதன் இரவுகளில்) நின்று தொழுதிட மற்றும் நல்ல அமல்களை (அதிகம்) அதில் செய்திட உதவ வேண்டும் என்றும் அவனிடத்தில் (பிரார்த்தித்து) கேட்பதாகும்.
ஏனென்றால், இது முஸ்லிமுடைய வாழ்கையில் ஒரு (பொன்னான) வாய்ப்பாகும். (இது) முஸ்லிமுடைய வாழ்கையில் ஒரு (பொன்னான) வாய்ப்பாகும்.
من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
யார் ரமதான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிராரோ, அவருடைய முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும். மேலும் யார் ரமதான் (மாத இரவுகளில்) ஈமானுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும் தொழுவாரோ, அவருடைய முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்.
ஆகவே, இது முஸ்லிமின் வாழ்கையில் ஒரு (பொன்னான) வாய்ப்பாகும். இன்னொரு முறை ரமதான் அவரிடத்தில் வராமல் போகலாம். ஆகவே, ஒரு முஸ்லிம் ரமதான் மாதத்தின் வருகையை முன்னிட்டு சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைவான். மேலும் அதை ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியுடன் வரவேற்பான்.
மேலும் அதை அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதில் (நன்கு) பயன்படுத்திக் கொள்ளவான். அதனுடைய இரவு நின்று தொழுவதற்கு மற்றும் அதனுடைய பகல் நோன்பு நோற்பதற்கு, குர்ஆன் ஓதுவதற்கு மற்றும் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கு (என வகுத்துக் கொள்வான்). ஆகவே, அது முஸ்லிமுக்கு ஒரு பெரும் செல்வமாகும்.
எவர்கள் ரமதான் வந்துவிட்டால், முஸ்லிம்களை (வீணானவற்றில் நேரத்தை) செலவழிட வைப்பதற்காக சீர்கெட்ட, திசைதிருப்பக்கூடிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், சிரிப்புக் கதைகள் மற்றும் (வீண்) போட்டிகள் முதலியவற்றை தயார் செய்கின்றார்களோ, அவர்கள் (யாவரும்) ஷைத்தானுடைய படைகள் ஆவர்; ஷைத்தான் அவர்களை இதற்காக படைகளாக ஆக்கியுள்ளான். ஆகவே, இவர்களை விட்டும் எச்சரிக்கையாக இருப்பதும், இவர்களை பற்றி எச்சரிப்பதும் ஒரு முஸ்லிமின் மீது கடமையாகும்.
ரமதான் என்பது வேடிக்கை, வீன் விளையாட்டு, நாடகங்கள், பரிசளிப்புகள், விளையாட்டுகள் மற்றும் நேரத்தை வீணாக செலவளிப்பதற்கான நேரம் அல்ல. ஆம்.
வீடியோ-வினை பார்வையிட
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:


