பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி:

” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது…

பதில்:

அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:

நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி நம்மிடம் வந்தது அவர்கள் நடத்தப்படக்கூடிய இந்த முயற்சி குறிப்பாக முஸ்லிம்களுக்கானது (மேலும்) முஸ்லிம்களால் நடத்தப்படக்கூடியது. அவருடைய இந்த ஜிகாத் இஸ்லாமிய ஜிகாத் ஆகும். ஏனென்றால் அவர்கள் யூதர்களால் அநீதி இழைக்கப்பட்டவர்கள் எனவே (இது) அவர்களுக்கு கட்டாய கடமையாகும். அவர்கள் தங்களையும் தங்களது குடும்பங்களையும் செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்வது உன்னுடைய சக்திக்கு உட்பட்டவாறு எதிரிகளை அவருடைய பூமியிலிருந்து வெளியேற்றுவதும் (அவர்கள் மீது கடமையாகும்).

இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் ஹமாஸ் இயக்கத்தோடு பங்கு பெற்றவர்கள் நமக்கு அறிவித்தார்கள். அவர்கள் நம்பகமானவர்கள் அவர்களுடைய நோக்கம் எல்லாம் இஸ்லாமிய சட்டங்களை அவர்களுக்கு மத்தியில் நடைமுறைப்படுத்துவதாகும். மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் , அவர்களுக்கு உறுதியாக இருப்பதும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் கடமையாகும். யூதர்கள் இந்த பூமியில் இருந்து வெளியேற்றப்பட்டு முஸ்லிம்களுடைய ஊர்களுக்கு திருப்புவதில் அல்லாஹ் சுபஹானஹூதஆலா கூறுகிறான் :

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِيْنَ يَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوْا فِيْكُمْ غِلْظَةً‌ وَاعْلَمُوْاۤ اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏

நம்பிக்கையாளர்களே! பகைமையையும், விஷமத்தனத்தையும் வெளிப்படுத்துகின்ற உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் : 9:123)

اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுத பாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரைமீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று.

(அல்குர்ஆன் : 9:41)

 

இதேபோன்று நிறைய அர்த்தங்கள் உள்ள குர்ஆன் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“உங்களுடைய செல்வங்களாலும் உடைமைகளாலும் உங்களது நாவினாலும் இறை நிராகரிப்பவர்களுடன் போர் செய்யுங்கள். நிச்சயமாக அவர்கள் அநியாயம் அளிக்கப்பட்டவர்கள்.”

“முஸ்லிம் இன்னொரு முஸ்லிமும் சகோதரர் ஆவான் அவனை ஏமாற்றக்கூடாது எதிரிகளிடம் ஒப்படைக்க கூடாது.”

மேலும் கூறினார்கள்:

“உனது சகோதரர்களுக்கு உதவி செய் அவன் அநியாயக்காரனாக இருந்தாலும் சரி.அநியாயம் அளிக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி என்று.” அதற்கு நபித்தோழர்கள் “அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்யலாம், அநியாயம் செய்தவனுக்கு எப்படி (உதவி செய்வது) என்று…”

அதற்கு நபியவர்கள் “அவனை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பது(தான்) அநியாயம் செய்பவனுக்குரிய உதவி)” என்று கூறினார்கள்.

அதேபோன்று நிறைய ஹதீஸ் உள்ளது.

அல்லாஹ்வுடைய பாதையில் பலஸ்தீனத்தில் போர் செய்யும் எங்களுடைய முஜாஹிதீன்களின் பாதத்தை அல்லாஹ் உறுதிப்படுத்துவானாக.

 

مجلة الدعوة الصادرة في 9/8/1409هـ. (مجموع فتاوى ومقالات الشيخ ابن باز: 4/ 295).

– முஹம்மத் உவைஸ் மதனி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply