நோன்பு குறித்த கேள்வி பதில்கள்

கேள்வி :நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களைபயன்படுத்துவதன் சட்டம் என்ன?

பதில்:

ரமளான் பகல் பொழுதுகளில் அதை பயன்படுத்துவதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் தவறில்லை. எனினும் தூபத்தை(சாம்பிராணி, சந்தனம் போன்றதைத்) தவிர, ஏன் எனில் அதில் புகை என்ற வயிற்றை சென்றடையும் பொருள் உள்ளது.

– மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி :வேண்டுமென்றே உணவு ரமழானில் ஒரு நாள் உட்கொண்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன? அவரின் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா?

பதில்:

ஆம், பாவமன்னிப்பின் நிபந்தனைகள் பூரணமாக இருப்பின், அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். அருள்மறை அல்-குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

وَاِنِّىْ لَـغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ثُمَّ اهْتَدٰى‏

“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்”.

(அல்குர்ஆன் : 20:82)

– மஜ்மூஃ அல் ஃபதாவா லஜ்னா அத்-தாயிமா 4513

கேள்வி:

நோன்பாளி உயிழ் நீரை விழுங்குவதற்கான மார்க்கத் தீர்ப்பு என்ன?

பதில் :

உமிழ்நீரை விழுங்குவதில் தவறில்லை. மேலும் இது பற்றி மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு உள்ளதாகவும் நான் அறியவில்லை. காரணம், அதைத் தவிர்ப்பதில் உள்ள சிரமம் அல்லது இயலாமையே எனினும் சளி மற்றும் கபம் என்பன வாயை எட்டினால் அதை துப்பிவிடவேண்டும் அதை வெளியேற்ற முடியும் என்பதினால் நோன்பாளி அதை விழுங்கக் கூடாது. மேலும் அவை உமிழ்நீரைப் போன்றல்ல அல்லாஹ்விடம் நல்லவைகளை வேண்டுகிறேன்.

– மஜ்மூஃ அல் ஃபதாவா இப்னு பாஸ்(ரஹிமஹுல்லாஹ்) 3/251

கேள்வி :

பகல் பொழுதுகளில் நோன்பாளி நோயுற்ற நிலைமையில் சப்போசிட்டரிகளை ஏற்றிக்கொள்வதன் மார்க்கத்தீர்ப்பு என்ன?

பதில்:

குற்றமில்லை, நோன்பாளியான ஒரு மனிதன் நோயுற்று இருக்கும் போது சப்போசிட்டரை தனது குதம் வழியாக ஏற்றிக்கொள்வதில் தவறில்லை. ஏனெனில் அது உணவோ பானமோ அல்லது அதன் அர்த்தத்தில் பயன்படுத்தப் படும் ஒன்றோ அல்ல.

– மஜ்மூஃ ஃபதாவா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) 1/502

கேள்வி:

ஒரு நோன்பாளி! நரம்பு வழி ஊசி,தசைவழி ஊசி), ஆகியவற்றைப் பயன்படுத்துதல்) மற்றும் பரிசோதனைக்காக இரத்தம் குத்தி எடுத்தல் என்பவற்றின் மார்க்கத் தீர்ப்புகள் என்ன?

பதில்:

அவர்களின் நோன்பு முறியாது என்பதே சரியான கருத்தாகும். நோன்பை முறிப்பதெல்லாம் ஊட்டச் சத்து) ஊசிகளாகும். அதே போன்று பரிசோதனைக்காக இரத்தம் குத்தி எடுத்தாலும் அதைக் கொண்டு நோன்பாளியின் நோன்பு முறியாது.

– மஜ்மூஃ அல் ஃபதாவா வா-மக்காலாத் இப்னு பாஸ்(ரஹிமஹுல்லாஹ்) 15 / 258

கேள்வி :

Mouthwash போன்ற வாய் கொப்பளிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதனால் நோன்பு முறியுமா?

பதில்:

அதை விழுங்கிவிடாத வரை நோன்பு முறியாது.எனினும் தேவை ஏற்படாது அதை பயன்படுத்த வேண்டாம். மேலும் அதிலிருந்து எதுவும் வயிற்றை சென்றடையவில்லையெனில் நோன்பு முறிந்துவிட்டதாகக் கருதி நோன்பைத் திறந்துவிட வேண்டாம்.

– கிதாபுத் தாவா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) 1/170

கேள்வி:

பள்ளி/கல்லூரி மற்றும் பொதுவான தேர்வுகள் நோன்பை விடுவதற்கு காரணமாக் கொள்ள முடியுமா?

பதில்:

பாடசாலைப் தேர்வுகள் மற்றும் அதுபோன்ற ஏனைய தேர்வுகள்) நோன்பை விடுவதற்குரிய (சலுகைக்) காரணிகளாக கொள்ள முடியாது.

– மஜ்மூஃ அல் ஃபதாவா வா-மக்காலாத் இப்னு பாஸ்(ரஹிமஹுல்லாஹ்) 15 / 250

கேள்வி :

(ஒருவர்) விமான நிலையத்தில் நோன்பு திறந்தார். பின்னர் விமானம் புறப்பட்டு பரந்த பொழுது (திரும்பவும்) சூரியனைக் காண்கிறார். (இவரது நோன்பு செல்லுபடியாகுமா?)

பதில்: நீங்கள் சூர்ய அஸ்தமனத்தின் பின்னர் விமான நிலையத்தில் நோன்பு திறந்திருந்தால் அது உங்களுக்குப் போதுமானதாகும்.

அப்போது விமானம் பறந்து செல்கையில் நீங்கள் சூரியனைக் கண்ட பொழுதிலும் அது உங்கள் நோன்பைப் பாதிக்காது. சூர்ய அஸ்தமனத்துடன்) உங்களுடைய அந்த நாள்(நோன்பு) முடிந்துவிட்டது,எனினும் நோன்பை பிடித்த நிலையில் விமானம் புறப்பட்டுவிட்டால் சூரியன் உங்களை விட்டும் மறையும் வரை நோன்பை வைத்திருக்க வேண்டும். எனினும் சூரியன் மறைந்த பின்னர் தான் விமானம் புறப்பட்டது எனில் நீங்களோ விமான நிலையத்திலேயே நோன்பை திறந்தவராவீர்.

– அல் போஹுஸ் அல் இஸ்லாமிய்யா 16/130,மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) 19/331-334

கேள்வி:

இருபத்து நான்கு மணி நேரத்தில் இரவு பகல் மாறாத ஊரில் வசிப்பவர். எடுத்துக்காட்டாக; அதன் பகல் பொழுது இரு நாட்கள், அல்லது ஒரு வாரம், அல்லது ஒரு மாதகாலம், அல்லது அதைவிட அதிகமாக உள்ள ஊரில் (வசிப்பவரைப் போன்று) அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவர் தனது நோன்பை எப்படி நோற்க வேண்டும்?

பதில்: அவர் தனக்கு அண்மித்த, 24 மணித்தியாலங்களுக்குள் இரவு பகல் மாறி மாறி வரும் ஊரின் பகலை அதன் அளவிலும், இரவை அதன் அளவிலும் வைத்துக் கணிப்பிட வேண்டும்.

– மஜ்மூஃ அல் ஃபதாவா இப்னு பாஸ்(ரஹிமஹுல்லாஹ்) 15 / 293 – 300

கேள்வி :

வடிகுழாய்,Endoscopy,ஆகியவைகளை சிகிசிச்சைக்காக பயன்படுத்தல், அல்லது ஊடுகதிர் (X-Ray) தெளிவாக இருக்க Gel வகைகள் பயன்படுத்தல் (என்பன நோன்பை பாதிக்குமா?)

பதில்:

நோன்பை முறிக்காது.

– மஜ்மூஃ ஃபிக்ஹ் அல்-இஸ்லாமி தீர்ப்பு 93, 1/10

 

தொகுப்பு:ahsaic.com

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply