கேள்வி 01:-
இந்த ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா?
பதில்:-
“ஜகாத் என்பது மகத்துவமான ஒன்றாகும். அது சமூகத்தில் பெரிய பிரயோஜனத்தை உண்டாக்குகிறது.
அதன் மூலம் முஸ்லிம்களில் சிலர் சிலரின் கவலையை நீக்கி ஆறுதல் கூறுபவர்களாக உள்ளனர்.
தமது செல்வங்களிலிருந்து (அந்த ஏழையான சகோதரனுக்கு) தேவைகள் கருதி கொடுத்து உதவுகின்றனர்.
எனவே இந்த ஜக்காத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கப்படுகின்றது. கடன்கள் நீக்கப்படுகின்றன. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் பால் மென்மேலும் இணைக்கப்படுகின்றன. எனவே அதில் எத்தனையோ நலவுகள் காணப்படுகின்றன.
அதனாலேயே ஏழைகள், ஜகாத்தை வசூலிப்பவர்கள், புதிதாக இஸ்லாத்தை ஏற்றோர், அடிமைகள், கடன்களை அடைப்பதற்கு முடியாத கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், கொடுப்பதற்கு எந்தொன்றும் கையில் இல்லாத நிலையில் ஊரைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்கள் போன்றவர்களுக்கு ஜகாத் வழங்கப்படுவதை அல்லாஹ் மார்க்கமாக ஆக்கியுள்ளான்.
பார்க்க:-
அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
“فتاوى نور على الدرب” என்று பத்வா தொகுப்பு
(பாகம் – 15/ பக்கம் – 7)
தமிழாக்கம் : அபூ அப்திர் ரஹ்மான் (அப்பாஸி,மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:


