கேள்வி : ஒரு பித்அத்தைச் செய்யக்கூடியவர் பித்அத்வாதியாக கருதப்படுவாரா?இது தொடர்பான அளவுகோல் என்ன?
ஷெய்க் முக்பில் பின் ஹாதி அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்) பதில் கூறுவதாவது :
“இது தொடர்பாக நாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பேசியுள்ளோம், இவ்விடயத்தின் அளவுகோல் என்னவெனில், பித்அத்தை செய்யும் ஒருவர் “பித்அத்வாதி (புதுமைக்காரர்)”தான்? இது போதுமானதா இல்லையா?
ஆமாம்! இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவெனில், மீலாத் விழா கொண்டாட்டம், ரஜப் மாதத்தின் 27-ம் நாள் கொண்டாட்டம், ஹிஜ்ரத் கொண்டாட்டம், ஷாபானின் நடுப்பகுதி இரவைக் கொண்டாடுவது போன்ற பித்அத்களை யார் செய்கிறாரோ, மேலும் சூஃபிகள் நிகழ்த்தும் கூட்டங்கள் மற்றும் மசூதிகளுக்குள் (திக்ர் என்ற பெயரில்) நடனமாடுவது போன்றவைகளை செய்கின்ற ஒரு நபர் ‘பித்அத்வாதி’ என்றே அழைக்கப்படுவார்.
அதே சமயம், பித்அத் செய்யும் ஒருவர் அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஆ கோட்பாட்டை சார்ந்தவராக இருந்தால், அவரை நோக்கி ‘பித்அத்வாதி’ என்று கூறக்கூடாது; மாறாக நீங்கள் செய்த இச்செயல் பித்அத்தை சேர்ந்தது என்று அவரிடம் தெளிவுபடுத்த வேண்டும்.
கலீஃபா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்தில் ஏற்பட்ட ஜும்ஆ தினத்தின் முதல் அதான் (பாங்கு) :இதனைப் பொருத்தமட்டில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த குறிப்பிட்ட செயலை மாத்திரமே பித்அத் என்று சொன்னார்கள்.
இருப்பினும், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை பித்அத்வாதி என்று சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை.
என்னிடம் உங்களுக்கான ஒரு கேள்வி உள்ளது என்று இமாம் முக்பில் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்.அக்கேள்விக்கு ஷெய்க் யஹ்யா அல்-ஹஜூரி (ஹஃபிதஹுல்லாஹ்) பதிலளித்தார்,
ஷெய்க் முக்பில் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கேட்டதாவது :
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அச்செயல் ஸுன்னா இல்லையென்றால்,
ஏன் நபி (صلّى الله عليه و سلّم) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ..? :
“என்னுடைய வழிமுறையையும், நேர்வழிபெற்ற கலீஃபாக்களுடைய வழிமுறையையும் பின்பற்றுங்கள்; அதனை கடைவாய் பற்களால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
இது குறித்து உங்கள் பதில் என்ன..?(இமாம் முக்பில் அவர்கள் ஷெய்க் யஹ்யா அல்-ஹஜூரி அவர்களிடம் கேட்கிறார்கள்.)
ஷெய்க் யஹ்யா அல்-ஹஜூரி (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களின் பதில் :
நபி (صلّى الله عليه و سلّم) அவர்கள் “….சரியான வழிகாட்டப்பட்ட கலீஃபாக்களின் ஸுன்னா” என்றே சொன்னார்கள். நபியவர்கள் கலீஃபாக்களில் ஒருவரது ஸுன்னா என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே இதனடிப்படையில்,
நபியவர்கள் கூறியதன் விளக்கமாவது :
கலீஃபாக்களில் அனைவரது ஸுன்னாவையும் நாங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அவர்களில் ஒருவரது செயலை மாத்திரம் ஒட்டுமொத்த ஸுன்னாவாக எடுத்துக் கொள்ள கூடாது; நபி (صلّى الله عليه و سلّم) அவர்களைத் தொட்டும் கலீஃபாக்கள் கூறிய ஆதாரப்பூர்வ செய்திகளை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஹதீஸ் பற்றி அபூ முஹம்மது இப்னு ஹஸ்ம் குறிப்பிட்டுள்ளது என்னவெனில், குலஃபாக்களில் ஒருவரின் கூற்றைப் பற்றிக் கொண்டு, மீதமுள்ளவற்றை விட்டுவிட்டால், நாங்கள் தவறு செய்ததாகிவிடும். இருப்பினும் அவர்களின் அனைத்து கூற்றுகளிலிருந்தும் ஆதாரங்களுடன் பொருந்திப் போவதை நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.”
இமாம் முக்பில் (ரஹிமஹுல்லாஹ்) திரும்ப கூறியதாவது :
”நல்லது. நீங்கள் மிகச் சரியாக பதிலளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக..!
-ஷெய்க் இல்ஹாஜ் முஹாஜிரி அவர்களது வழிகாட்டலைக் கொண்டு அரபியில் உள்ள ஆடியோவில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டது.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: