கேள்வி:
பின்வரும் ஹதீஸில் வரும் கல்வி(இல்மு) எனும் சொல்லின் பொருள் என்ன? அது மார்கத்தின் கல்வியை குறிக்குமா அல்லது உலக கல்வியை குறிக்குமா?
அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா) 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. ( ஸஹீஹ் முஸ்லிம்)
பதில்:
இந்த ஹதீஸ் பொதுவான பொருளில் வருவதாகவே தெரிகிறது. ஒருவரின் எந்த ஒரு கல்வி/அறிவை கொண்டு மக்கள் பயன் அடைகிறார்களோ, அவை அனைத்திற்கும் அவருக்கு நன்மை கிடைக்கும். ஆனால் இதில் ஆக சிறந்ததும் உயர்ந்ததும் மார்கக் கல்வியே. உதாரணமாக, ஒருவர் சிலருக்கு ஹலாலான தொழில் ஒன்றை கொற்றுக்கொடுத்து, அதைக்கொண்டு அவர்கள் பயன் பெறுவார்கள் என்றால், அவர் மரணித்த பின்னும் அதன் நன்மைகள் அவரை சென்றடையும்.
ஷேக் உஸைமீன், ஸில்ஸிலதில் லிகாஅத் அல் பாப் அல் மஃப்தூஹத்.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: