____﷽_____
கேள்வி:
கடனை கொடுத்தவரை மறந்தால் என்ன செய்வது.
பதில்:
ஷைய்ஃக் முஹம்மது பின் ஸாலிஹ் உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள்.
கடன் கொடுத்தவர் இன்னார் என்று தோன்றினால் அவரிடம் சென்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நபர் ஆம் இந்த தொகையை நீங்கள் என்னிடம் கடனாக பெற்றீர்கள் என்று கூறினால் அந்த நபரிடம் அந்த கடனை அடைக்க வேண்டும்.கடன் கொடுத்த நபர் யார் என்று ஒரு நினைவும் இல்லாதபோது.
கடன் கொடுத்தவரை மறந்தால் அதை ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம் அல்லது பள்ளிவாசலின் நிர்மான பணிக்காக கொடுக்கலாம் அல்லது வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.
பிறகு அந்த தொகையை நன்மைக்கு செலவழிதத்திற்கு கடன் கொடுத்த நபர் வந்து என்னிடம் கடன் பெற்ற அந்த தொகையை கேட்டால் அவரிடம் கூறுங்கள். உங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய அந்த தொகையை நன்மைக்காக வேண்டி செலவழித்து விட்டேன்.நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டால் அதற்குரிய கூலி உங்களுக்கும் கிடைக்கும். இல்லையென்றால் அந்த கடன் தொகை யை நான் உங்களுக்கு தந்து விடுகிறேன்.
ஷைய்ஃக் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹி) உரையிலிருந்து எடுக்கப்பட்டது…
மொழிப்பெயர்ப்பு: முஹம்மத் ரித்வான், அபூ ஸாலிஹ்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: