ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

கேள்வி 03 : ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பதில்: தொழுகையை விடுபவன் “காபீர்” (இறை நிராகரிப்பாளன்) ஆவான். அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:- ஒரு மனிதனுக்கு மத்தியிலும் இணைவைப்புக்கும், இறை நிராகரிப்புக்கு மத்தியில் இருப்பது தொழுகையை விடுவதாகும். நூல்: முஸ்லிம்-82 இந்த ஹதீஸ் பொதுப்படையாக இடம் பெற்றிருப்பதன் காரணமாக தொழுகை கடமை என்பதை மறுக்காமல் (சோம்பேறித்தனத்தின் காரணமாக) ஒருவர் விட்டிருந்தாலும் (அவர் இறை நிராகரிப்பாளனாகி விடுவார்.) ... Read more

ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? பதில்: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடமாட்டார். ஆனாலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகும். அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய (ஸகாத்) கடமையை நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். ... Read more

ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? | இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 01:- இந்த ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? பதில்:- “ஜகாத் என்பது மகத்துவமான ஒன்றாகும். அது சமூகத்தில் பெரிய பிரயோஜனத்தை உண்டாக்குகிறது. அதன் மூலம் முஸ்லிம்களில் சிலர் சிலரின் கவலையை நீக்கி ஆறுதல் கூறுபவர்களாக உள்ளனர். தமது செல்வங்களிலிருந்து (அந்த ஏழையான சகோதரனுக்கு) தேவைகள் கருதி கொடுத்து உதவுகின்றனர். எனவே இந்த ஜக்காத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கப்படுகின்றது. கடன்கள் நீக்கப்படுகின்றன. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் பால் ... Read more

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? தொகுப்பு : ஷெய்க் SHM இஸ்மாயில் ஸலஃபி பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள். இரண்டாவது வகை: ஒரே மஸ்ஜிதில் இரண்டு இமாம்களை நியமித்தல். ... Read more

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் பிரதானமானது தான் தலையை மஸ்ஹ் செய்கின்ற ... Read more

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களின் தொகுப்புதமிழில்: முஹம்மத் அஸ்லம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளின் அந்தஸ்த்து ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ((ரமதான் மாத நோன்பிற்க்கு அடுத்தபடியாக, நோன்புகளில் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளாகும்.அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக)நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1163) முஹர்ரம் 10ஆம் நாளன்று நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு (பலன்) ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: صِيَامُ ... Read more

“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?

“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?   – அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி – அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி – அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் கேள்வி: “(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், தெளிவான ஆதாரத்தின் மீதே நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்” (12:108) (என்ற ஆயத்திற்கும்) “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற பிரபலமான ... Read more

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள்

முஹர்ரம், ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள் அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனுடைய சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மத் ( ﷺ ) அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற நம் அனைவர் மீதும் என்னென்றும் நின்று நிலவட்டுமாக !   முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த சுருக்கமான தொகுப்பு. இக்கட்டுரை முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ஹஃபிழஹுழ்ழாஹ்) அவர்களின் சிறு ... Read more

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் – ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி 

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி  அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் ... Read more

ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்   அல்லாஹுத்ஆலா படைத்த காலங்களில் சிறப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுவே ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். இது ஷஃபான் மாதத்திற்குரிய ஒரு சிறப்பாகும். எனவே, இம்மாதத்தில் நாமும் அதிகமாக நோன்பு நோற்பது நபிவழியாகும்.   ஒவ்வொரு வணக்க வழிபாட்டிலும் பித்அத்கள் உருவாக்கப்பட்டது போன்று இம்மாதத்தின் ... Read more