ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

கேள்வி 03 : ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பதில்: தொழுகையை விடுபவன் “காபீர்” (இறை நிராகரிப்பாளன்) ஆவான். அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:- ஒரு மனிதனுக்கு மத்தியிலும் இணைவைப்புக்கும், இறை நிராகரிப்புக்கு மத்தியில் இருப்பது தொழுகையை விடுவதாகும். நூல்: முஸ்லிம்-82 இந்த ஹதீஸ் பொதுப்படையாக இடம் பெற்றிருப்பதன் காரணமாக தொழுகை கடமை என்பதை மறுக்காமல் (சோம்பேறித்தனத்தின் காரணமாக) ஒருவர் விட்டிருந்தாலும் (அவர் இறை நிராகரிப்பாளனாகி விடுவார்.) ... Read more

ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? பதில்: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடமாட்டார். ஆனாலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகும். அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய (ஸகாத்) கடமையை நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். ... Read more

ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? | இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 01:- இந்த ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? பதில்:- “ஜகாத் என்பது மகத்துவமான ஒன்றாகும். அது சமூகத்தில் பெரிய பிரயோஜனத்தை உண்டாக்குகிறது. அதன் மூலம் முஸ்லிம்களில் சிலர் சிலரின் கவலையை நீக்கி ஆறுதல் கூறுபவர்களாக உள்ளனர். தமது செல்வங்களிலிருந்து (அந்த ஏழையான சகோதரனுக்கு) தேவைகள் கருதி கொடுத்து உதவுகின்றனர். எனவே இந்த ஜக்காத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கப்படுகின்றது. கடன்கள் நீக்கப்படுகின்றன. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் பால் ... Read more

ஸகாத்துல் ஃபித்ரை சர்க்கரை, தேநீர் மற்றும் டின்னில் அடைத்த பொருட்கள் (இன்னும் இது போன்ற மற்ற பொருட்கள்) போன்றவற்றில் இருந்து கொடுக்கலாமா?

கேள்வி   ஸகாத்துல் ஃபித்ரை சர்க்கரை, தேநீர் மற்றும் டின்னில் அடைத்த பொருட்கள் (இன்னும் இது போன்ற மற்ற பொருட்கள்) போன்றவற்றில் இருந்து கொடுக்கலாமா?   பதில்   அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.   முதலில்:   மக்கள் முக்கிய உணவாகக் கருதும் பொருட்களைத் தவிர, ஸகாத்துல் ஃபித்ராக வேறு பொருட்களை கொடுப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல.   ஸஹிஹுல் புகாரியில் அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஹதீஸின் மூலம் இது உறுதிபடுத்தபடுகிறது.   ... Read more

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்   கேள்வி:-   என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும்.   பதில்:-   தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ... Read more

ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள்

ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள்   கேள்வி: 13. வியாபாரத்தின் மூலம் கிடைக்கின்ற இலாபத்திற்கு வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை உள்ளதா? அதனை உதாரணம் கூறி தெளிவு படுத்தவும்..   பதில்:-   வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை இல்லாத பொருட்களில் இது மூன்றாவதாகும்.   உதாரணமாக, காணிகள் வியாபாரம் செய்யும் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு காணியை வாங்குகிறார். (அதனை வாங்கி) ஒரு வருடம் பூர்த்தியாகும் போது அதன் விலை இரண்டு இலட்சம் ... Read more

ஸகாத் குறித்த கேள்வி பதில்கள்

ஸகாத் குறித்த கேள்வி பதில்கள் கேள்வி: 11. பழங்கள், வித்துக்களில் வருடம் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லையா? இதனை சற்று தெளிவு படுத்தவும்???   பதில்:- பழங்களையும், வித்துக்களையும் அறுவடை செய்யப்பட்டதும் அவைகளது ஸகாத்தை வழங்க வேண்டும். ஒருவர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யும் போது, அறுவடை செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஸகாத் கொடுப்பது அவருக்கு கடமையாகும். கேள்வி: 12. கால் நடைகள் ஈன்றெடுத்த குட்டிகளுக்கு ... Read more

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி09: ஸகாத் கடமையான பொருட்கள், சொத்துக்கள் ஸகாத் கொடுப்பவரின் கைவசம் காணப்பட வேண்டும்.இது பற்றிய விளக்கத்தை தரவும்? பதில்:- அதாவது, ஸகாத் கடமையாகும் பொருட்கள், சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட வேண்டும். சில நேரங்களில் இவருக்கு சொந்தமான சொத்துக்கள் வேறொருவரின் கைவசம் காணப்படும். ஆனால் இவருக்கு அவைகள் கிடைப்பதற்கு பல நாட்கள் செல்லலாம். அல்லது சில நேரங்களில் அவைகள் அழிந்து விடலாம். எனவே இப்படிப்பட்ட சொத்துக்களில் ஸகாத் கடமையாக மாட்டாது.   ⛳ பார்க்க:- “الشرح الممتع ... Read more

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி: 7.ஸகாத் உடைய அளவீடு என்றால் என்ன? அது ஸகாத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதற்கு ஆதாரம் என்ன? பதில்:- சொத்துக்களில் ஸகாத் கடமையாவதற்கு குறிப்பிடப்பட்ட ஒரு அளவீட்டை மார்க்கம் வைத்துள்ளது. அதை ஒருவர் எத்திக்கொண்டால் ஸகாத் கடமையாகும். இதற்கு அரபு மொழியில் “நிஸாப்b” என்று கூறப்படுகிறது. அந்த அளவீடு ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே ஒருவரிடம் எந்த வித சொத்துக்களும் இல்லையெனில் அவரின் மீது ஸகாத் கடமையாக மாட்டாது. அதேபோல் ஒருவரிடம் சில சொத்துக்கள் காணப்படுகின்றன. ... Read more

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி: 05. ஸகாத் கடமையாகுவதற்குறிய நிபந்தனைகள் யாவை? பதில்:- 1. ஸகாத் கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். 2. சுதந்திரமானவராக இருக்க வேண்டும். 3. ஸகாத் கொடுக்க வேண்டிய பொருட்கள் (அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட)அளவை அடைந்திருத்தல். 4. அவைகள் அவரின் கைவசம் காணப்பட வேண்டும். 5. அவைகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். ஆனால் பழங்கள், வித்துக்களில் வருடம் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லை. பார்க்க:- “مجموع فتاوى ورسائل العثيمين” (16/18) கேள்வி: 06. இறை ... Read more