அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | இறுதி தொடர் |  

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | இறுதி தொடர் | குறிப்பு 05: தயம்மும் செய்த பின்னர் தண்ணீர் கிடைத்தல் தொடர்பான சட்டங்கள்: இதை பின்வருமாறு பிரித்து நோக்கலாம் :   1. தயம்மும் செய்து தொழுவதற்கு முன்னரே தண்ணீர் கிடைத்தல் :   நீர் கிடைக்காததன் காரணமாக தயம்மும் செய்து, தொழுவதற்கு முன்னர் தண்ணீர் கிடைத்துவிட்டால், தயம்மும் முறிந்துவிடும். தண்ணீரினால் வுழூ செய்தே தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் இருக்கும் போது தயம்மும் செல்லுபடியாகாது. ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 05 |  

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 05 |   குறிப்பு : 02   தயம்முமின் போது இரு கைககளிலும் தடவுகையில் முழங்கை வரை தடவ வேன்டும் என சில அறிஞர்கள் குறிப்பிடும் அதே வேளை, மணிக்கட்டுவரை மட்டுமே தடவ வேண்டும் என ஏனைய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.   மணிக்கட்டு வரை தடவ வேண்டும் என்பதே ஆதாரபூர்வமானதாகும். முழங்கை வரை தடவ வேண்டும் என்று கூறுவோர் குறிப்பு 01ல் (முந்தைய தொடர்) குறிப்பிடப்பட்ட ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 |   தயம்மும் செய்யும் முறை: இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் மிக எளிமையான தயம்மும் செய்யும் முறையை கற்றுத் தருகின்றன :   1)நிய்யத் வைத்தல்: வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் அவசியம் என்பதனால் தயம்முமின் போது நிய்யத் வைப்பதும் அவசியமாகும். நிய்யத் என்பது உள்ளம் சார்ந்த ஒரு வணக்கமாகும். எனவே தயம்மும் செய்வதாக மனதில் நினைத்தால் அதுவே நிய்யத் ஆகும். வாயினால் மொழிகின்ற ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 |   எதில் தயம்மும் செய்வது? தயம்மும் செய்வதற்கு எதை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் உள்ளன :   01. புழுதி மண்ணில் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும். இந்நிலைப்பாட்டை இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (றஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் கொண்டுள்ளனர்.   02. பூமியின் மேற்பரப்பிலுள்ள, பூமியோடு சார்ந்த மண், மணல், களி, பாறை, கல் போன்ற அனைத்திலும் தயம்மும் ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 02 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 02 |   தயம்மும் செய்வதற்கான காரணிகள்:   தயம்மும் செய்வதற்கு பிரதானமாக இரு காரணிகள் காணப்படுகின்றன :   நீர் கிடைக்காமை நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமை   நீர் கிடைக்காமை: ஒருவர் தனது சொந்த ஊரில் இருக்கும் போதோ, அல்லது பயணத்தில் இருக்கும் போதோ வுழூ செய்வதற்கோ, கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கோ நீரை பெற்றுக்கொள்ளாத போது தயம்மும் செய்யுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. இதற்கான ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 01 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 01 |   அல்லாஹ் இந்த சமூகத்திற்கென பிரத்தியேகமாக வழங்கிய அம்சங்களுள் தயம்மும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.   வுழூ செய்வதற்கு அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு நீரைப் பெற்றுக்கொள்ளாத போது, அல்லது நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளின் போது மாற்றீடாக அல்லாஹ் வழங்கிய ஏற்பாடே தயம்மும் ஆகும்.   தயம்மும் செய்கின்ற சூழ்நிலைகள் ஏற்பட்ட போதிலும் அதை நடைமுறைப்படுத்தாத பலர் சமூகத்தில் காணப்படுகிறார்கள். ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ]

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ]   9) கணுக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்:   வுழூவின் நிறைவாக இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது இறுதியாக கால்களை கழுவுமாறு குறிப்பிடுகிறான் (5:6).   கால்களை கழுவும் போது முதலாவதாக வலது காலையும் இரண்டாவதாக இடது காலையும் கழுவ வேண்டும்.   நபிகளார் வுழூ செய்த முறை ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05

ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) :   முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின் தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6).   நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.   தலைப்பாகை ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04 6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :   நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :   1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :   அப்துல்லாஹ் இப்னு ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03   

  ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03     4) பற் துலக்குதல் :   பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று :   1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் ... Read more