ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

கேள்வி 03 : ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பதில்: தொழுகையை விடுபவன் “காபீர்” (இறை நிராகரிப்பாளன்) ஆவான். அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:- ஒரு மனிதனுக்கு மத்தியிலும் இணைவைப்புக்கும், இறை நிராகரிப்புக்கு மத்தியில் இருப்பது தொழுகையை விடுவதாகும். நூல்: முஸ்லிம்-82 இந்த ஹதீஸ் பொதுப்படையாக இடம் பெற்றிருப்பதன் காரணமாக தொழுகை கடமை என்பதை மறுக்காமல் (சோம்பேறித்தனத்தின் காரணமாக) ஒருவர் விட்டிருந்தாலும் (அவர் இறை நிராகரிப்பாளனாகி விடுவார்.) ... Read more

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? தொகுப்பு : ஷெய்க் SHM இஸ்மாயில் ஸலஃபி பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள். இரண்டாவது வகை: ஒரே மஸ்ஜிதில் இரண்டு இமாம்களை நியமித்தல். ... Read more

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் பிரதானமானது தான் தலையை மஸ்ஹ் செய்கின்ற ... Read more

அல்குர்ஆனிய துஆக்கள்

இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முக்கியமான மற்றும் அழகான துஆக்களின் (பிரார்த்தனைகளின்) தொகுப்பு அடங்கிய PDF ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் துஆக்கள், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள வழிகாட்டல்களாகும். இந்த PDF-ஐ பயன்படுத்தி, தினமும் குர்ஆனிய துஆக்களை ஓதி, அதன் மூலம் அல்லாஹ்வின் அருளையும், நெருக்கத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இதை உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து, நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா?

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா? “ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும் .” ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் ” ஸலாம்” (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அ‌ல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது ... Read more

ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்

01: ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது. “நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது.” * ஸூரா பனூ இஸ்ராயீல் : 78 இந்த வசனத்தில் கூறப்படும் “சாட்சியம் கூறக்கூடியதாக இருக்கிறது” என்பதன் பொருள், இரவு நேரத்து மலக்குகளும், பகல் நேரத்து மலக்குகளும் ஒன்று சேரும் நேரமாக இது உள்ளது என்பதாகும். * தஃப்ஸீர் இப்னு கஸீர் – (சூரா அல்-இஸ்ரா/78 & ஸஹீஹுல் புகாரி & ஸஹீஹ் முஸ்லிம் 02: ஃபஜ்ர் தொழுகை மூலமாக ... Read more

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்

ஆஷூரா நோன்பின் சட்டங்கள்அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களின் தொகுப்புதமிழில்: முஹம்மத் அஸ்லம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளின் அந்தஸ்த்து ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ((ரமதான் மாத நோன்பிற்க்கு அடுத்தபடியாக, நோன்புகளில் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளாகும்.அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக)நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1163) முஹர்ரம் 10ஆம் நாளன்று நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு (பலன்) ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: صِيَامُ ... Read more

நோன்பை முறிக்கும் 36 விடயங்கள்

ரமழான் காலங்களில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய நோன்பை முறிக்கும் நவீன பிரச்சினைகள். நோன்பை முறிக்கும் விஷயங்கள் குறித்து அறிஞர்கள் நான்கு விஷயங்களில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்: 1. உண்ணுதல் 2. குடித்தல் 3. உடலுறவு 4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப்போக்கு ஆனால், நவீன காலத்தில் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் உள்ளன, அவற்றில் எவை நோன்பை முறிக்கும் அல்லது முறிக்காது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கமாகக் கூறியுள்ளனர். இந்தத் தகவல்கள் சரியானவையே, ஆனால் ... Read more

ஷஃபான் 15ம் இரவு பற்றி மத்கப் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன?

ஷஃபான் 15ம் இரவு பற்றி மத்கப் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன? ஷஃபானுக்கு சிறப்புண்டு அல்லது அதன் 15ம் இரவுக்கு சிறப்புண்டு என்பதற்காக அதில் விஷேடமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடையாது. ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்குமாறு மாத்திரமே ஆதாரபூர்வமான அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளன. அதைத்தவிர உள்ள வணக்கங்களில் பல ஆதாரமற்றவை. இன்னும் சில பலவீனமான ஆதாரங்களையுடையவை. இக்கருத்து எனது சொந்தக் கருத்தோ வஹ்ஹாபிகளின் கருத்தோ அல்ல. மாறாக பல மத்கப் அறிஞர்கள் குறிப்பாக ஷாபி மத்ஹப் அறிஞர்கள் ... Read more

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK]

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK] அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாhpன் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதம்” என்ற இந்த நூலினை அரபியின் மூலவடிவம் “அஷ்ஷெய்க். சுலைமான் பின் ஜாஸிர் பின் அப்துல் கரீம் அல்-ஜாஸிர்” என்பவர்களால் தொகுக்கப்பட்டது. இது ... Read more