அதிகமான வருடங்கள் ஜகாத் தராமல் இருப்பவர் எவ்வாறு அதனை நிறைவேற்றுவது?

கேள்வி 04: அதிகமான வருடங்கள் (எனது பொருட்களுக்கான) ஸகாத்தை நான் வழங்கவில்லை. எத்தனை வருடங்கள் (வழங்கப்படவில்லை) என்பதையும் நான் அறிய மாட்டேன். என்னிடம் அதிகமான பணமும், சொத்துக்களும் உள்ளன. கடந்து சென்ற (வருடங்களுக்கான) ஸகாத்தை நான் எவ்வாறு கொடுக்க வேண்டும்? நான் எவ்வாறு தவ்பா செய்வது? பதில்:- தவ்பா செய்வதைப் பொருத்தவரையில், (முதலில்) முன் சென்ற வருடங்கள் விடயத்தில் வருந்த வேண்டும். அதை மீண்டும் செய்யக்கூடாது என்று உறுதி கொள்ள வேண்டும். அதை (முழுமையாக) கைவிட வேண்டும். ... Read more

ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

கேள்வி 03 : ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பதில்: தொழுகையை விடுபவன் “காபீர்” (இறை நிராகரிப்பாளன்) ஆவான். அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:- ஒரு மனிதனுக்கு மத்தியிலும் இணைவைப்புக்கும், இறை நிராகரிப்புக்கு மத்தியில் இருப்பது தொழுகையை விடுவதாகும். நூல்: முஸ்லிம்-82 இந்த ஹதீஸ் பொதுப்படையாக இடம் பெற்றிருப்பதன் காரணமாக தொழுகை கடமை என்பதை மறுக்காமல் (சோம்பேறித்தனத்தின் காரணமாக) ஒருவர் விட்டிருந்தாலும் (அவர் இறை நிராகரிப்பாளனாகி விடுவார்.) ... Read more

ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? பதில்: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடமாட்டார். ஆனாலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகும். அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய (ஸகாத்) கடமையை நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். ... Read more

ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? | இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 01:- இந்த ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? பதில்:- “ஜகாத் என்பது மகத்துவமான ஒன்றாகும். அது சமூகத்தில் பெரிய பிரயோஜனத்தை உண்டாக்குகிறது. அதன் மூலம் முஸ்லிம்களில் சிலர் சிலரின் கவலையை நீக்கி ஆறுதல் கூறுபவர்களாக உள்ளனர். தமது செல்வங்களிலிருந்து (அந்த ஏழையான சகோதரனுக்கு) தேவைகள் கருதி கொடுத்து உதவுகின்றனர். எனவே இந்த ஜக்காத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கப்படுகின்றது. கடன்கள் நீக்கப்படுகின்றன. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் பால் ... Read more