வித்ரு தொழுகையின் பின்னர் என்ன கூற வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

வித்ரு தொழுகையின் பின்னர் என்ன கூற வேண்டும்?

 

அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவித்தார்:

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு தொழுகையில் (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா) (குல்யா அய்யுஹல் காபிரூன்) (குல்ஹுவல்லாஹு அஹத்) ஆகிய சூராக்களை ஓதுவார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தால் (سبحان الملك القدوس) ஸுப்ஹான மலிக்குல் குத்தூஸ் என்று மூன்று முறை கூறுவார்கள். மூன்றாவது முறை சத்தத்தை உயர்த்திக் கூறுவார்கள்.

 

ஹதீஸ் நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா (2/93), முஸ்னத் அஹ்மத் (24/72)

 

இமாம் இப்னுல் முலக்கின், அல்பானீ, முக்பில் அல்வாதிஈ போன்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த ஹதீஸை ஆதாரபூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: வித்ருக்குப் பின்னர் سبحان الملك القدوس என்று மூன்று தடவைகள் கூறுவது விரும்பத்தக்கதாகும். (ஷர்ஹுல் முஹத்தப்: 4/16)

 

இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: வித்ருக்குப் பின்னர் سبحان الملك القدوس என்று மூன்று தடவைகள் கூறுவது விரும்பத்தக்கதாகும். மூன்றாவது தடவை சத்தத்தை உயர்த்திக் கூற வேண்டும். (அல்முங்னீ: 2/122)

 

ஆக்கம்: அஸ்கி அல்கமி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply