ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? பதில்: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடமாட்டார். ஆனாலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகும். அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய (ஸகாத்) கடமையை நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். ... Read more
