இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣4️⃣ |
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 5.ஸுன்னா என்பது இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையாகும் என்பதே அஹ்லுஸ் ஸுன்னாவினரின் கருத்தாகும். 6. மேலும், ஸுன்னா என்பது அல்குர்ஆனின் விளக்கவுரையுமாகும். அதாவது, ஸுன்னா அல்குர்ஆனை விளக்குகின்ற ஆதாரங்களாகும். 7. மேலும், ஸுன்னாவில் இல்லாத விடயங்களை (கியாஸ்)”ஒப்பீட்டாய்வு” அடிப்படையில் ஸுன்னாவுடன் சேர்க்கக் கூடாது. விளக்கம்: இங்கு ஸுன்னா என்பதன் மூலம், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையே கருதப்படுகின்றது. அவர்கள் சம்பந்தமான வழிமுறைகள் ... Read more