ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள்
கேள்வி:
13. வியாபாரத்தின் மூலம் கிடைக்கின்ற இலாபத்திற்கு வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை உள்ளதா? அதனை உதாரணம் கூறி தெளிவு படுத்தவும்..
பதில்:-
வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை இல்லாத பொருட்களில் இது மூன்றாவதாகும்.
உதாரணமாக, காணிகள் வியாபாரம் செய்யும் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு காணியை வாங்குகிறார். (அதனை வாங்கி) ஒரு வருடம் பூர்த்தியாகும் போது அதன் விலை இரண்டு இலட்சம் ரூபாயாக மாறிவிட்டது. அவருக்கு இலாபமாக கிடைக்கின்ற ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு வருடம் பூர்த்தியாக வில்லை. ஆனாலும் அது வாங்கிய விலையை (ஒரு இலட்சம் ரூபாயை) பின்தொடரும்.
⛳ பார்க்க:-
“الشرح الممتع للشيخ ابن العثيمين” (2/458)
14. கடனாகக் கொடுக்கப்பட்ட பல ரூபாய்கள் ஸகாத் கடமையானவருக்கு வரவேண்டியுள்ளது.எனவே, இந்தக் கடன் தொகையையும் சேர்த்தே ஸகாத் வழங்க வேண்டுமா?
பதில்:-
வசதியுள்ள ஒருவருக்கு இந்தக் கடன் வழங்கப்பட்டிருந்தால், அவரிடம் உள்ள பணத்துடன் கடன் தொகையையும் சேர்த்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் வழங்குவார்.
ஆனாலும், அவர் விரும்பினால் அவரது கையில் இருக்கின்ற பணத்திற்கு முதலில் ஸகாத் கொடுத்து விட்டு, கடன் தொகை கிடைக்கின்ற போது விடுபட்ட வருடங்கள் அனைத்திற்கும் ஒரேயடியாக ஸகாத்தை வழங்குவார்.
அவரது கடன் தொகை வசதியற்ற ஒருவரிடம் காணப்பட்டால், அத்தொகையை அவர் பெற்றுக் கொண்ட பிறகு அவரது கடனுக்கான அந்த வருடத்தின் ஸகாத்தை மாத்திரம் வழங்குவார்.
⛳ பார்க்க:-
“مجموع الفتاوى ورسائل العثيمين” (18/25)
இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.
அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.
தமிழில்:-
அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: