05) ஸகாத் கடமையாகின்ற மற்றும் கடமையாகாத பொருட்கள் அனைத்தையும் எங்களுக்கு நீங்கள் கூறுங்கள்?
பதில்
தங்கம், வெள்ளி மற்றும் மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்ற காகித நாணயங்கள், வியாபாரத்திற்காக தயார்படுத்தப்பட்டுள்ள நிலங்கள், வாகனங்கள், உபகரணங்கள், விவசாய நிலங்கள் போன்றவைகள் ஸகாத் கடமையாகும் பொருட்களில் உள்ளவைகளாகும்.
அதேபோன்று தானியங்களில் அரிசி போன்றவைகளும், பழங்களில் பேரிச்சை, திராட்சை போன்றவைகளும் பழுத்து (அறுவடை செய்யப்படும் காலப் பகுதியை அடைந்து கொண்டு, அதன் கடமையாகும்) அளவை எத்திக்கொண்டால் (அவைகளுக்கும் ஸகாத் கடமையாகிறது.)
மேலும் கால்நடைகளில் ஒட்டகம், மாடு, ஆடு போன்றவைகள் ஒரு வருடத்தின் பெரும்பான்மையான காலப்பகுதியில் அல்லது முழு வருடமும் மேய்ப்பு நிலங்களில் மேய்ந்திருந்தால் இவைகளிலும் ஸகாத் கடமையாகிறது.
இவைகளே ஸகாத் (கடமையாகும்) பொருட்களாகும். (அதாவது) நாணயங்கள், வியாபார பொருட்கள், பூமியிலிருந்து வெளிப்படும் பழங்கள் மட்டும் தானியங்கள், கால்நடைகள்.
இதுவல்லாத ஏனைய பொருட்களில் ஸகாத் கடமையாக மாட்டாது. (அதாவது) நமது பாவனைக்காக வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், நாம் வாழும் கட்டிடங்கள், கூலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் போன்றவைகளில் ஸகாத் என்பது கிடையாது.
பார்க்க:-
அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
“فتاوى نور على الدرب” என்று பத்வா தொகுப்பு
(பாகம் – 15/ பக்கம் 24-25 )
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:


