ரமழானில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுகின்றனவா?
ஷைதான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதன் அர்த்தம் என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சில ஹதீஸ்களில் கடுமையான ஷைதான்கள் (مردة الشياطين) விலங்கிடப்படுகிறார்கள் என்று இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அதேபோன்று ஒவ்வொரு மனிதனுக்கும் சாட்டப்பட்டிருக்கும் “கரீன்” என்று அழைக்கப்படும் ஷைதான்கள் விலங்கிடப்படுவதில்லை என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். அதற்கான ஆதாரம்:
“ஸபிய்யஹ்” -றளியல்லாஹு அன்ஹா- அவர்களுடன் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த இரு நபித்தோழர்களை, நபியவர்கள் அழைத்து இவர் எனது மனைவி “ஸபிய்யஹ்” என்று கூறினார்கள். ஷைதான் வேறு எண்ணங்களை அவ்விருவர்களின் உள்ளத்தில் போட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தார்கள் என்பதையும் விளக்கினார்கள். இந்த நிகழ்வு நபியவர்கள் றமளானில் “இஃதிகாப்” இருக்கும் போதே இடம்பெற்றது.
இன்னும் சில அறிஞர்கள், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதால் அவை எந்த ஒரு தீமையும் செய்துவிட முடியாது என்பது அர்த்தமல்ல; அவை அசையவே முடியாது என்பது அர்த்தமல்ல; ரமழான் அல்லாத காலங்களில் அவற்றால் செய்ய முடியுமான அனைத்தையும் ரமழானிலும் செய்ய முடியாமல் அவை தடுக்கப்படுகின்றன என்று விளக்கியுள்ளனர்.
இன்னும் சில அறிஞர்கள், மனிதனுடைய இரத்தம் ஓடும் நரம்பு நாளங்களில் எல்லாம் ஷைதான் செயல்படுகிறான் என்ற அடிப்படையில் ஒருவர் நோன்பு நோற்கும் பொழுது பசித்திருப்பதன் காரணமாக அவருடைய இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது; இதனால் ஷைதான்களுக்கு அதிகமாக பாவங்களைத் தூண்டுவதற்கு முடியாமல் போகின்றது; இப்படியே அவை விலங்கிடப்படுக்கின்றன என்று கருதுகின்றனர்.
ஒருவருடைய நோன்பின் தன்மைக்கு ஏற்ப ஷைதான் செயல்படுவதாகவும் சிலர் கருதுகின்றனர். அதாவது சிலருடைய நோன்பு பூரணத்துவம் கொண்டதாகவும் சிலருடைய நோன்பு குறைபாடுகள் கொண்டதாகவும் அமைந்திருக்கும்; அதற்கேற்ப ஷைதான் செயல்படுவதாகக் கருதுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் ஷைதான்கள் விலங்கிடப்படுகின்ற முறை ஒரு மறைவான உலகத்தில் நடக்கும் நிகழ்வாகும். அதனால் றமளான் அல்லாத காலங்களில் நடப்பதை விட குறைவாகவே ரமழானில் பாவங்கள் நடப்பதை அவதானிக்க முடியும்.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக ஷைதான்களின் எந்தத் தாக்கமும் றமளானில் இருக்காது என்பதில்லை. சில ஷைதான்களால் சில தாக்கங்கள் ரமழானிலும் நடக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பிரதான உசாத்துணைகள்:
– فتح الباري
– مجموع الفتاوى لشيخ الإسلام ابن تيمية
– الموقع الرسمي لفضيلة الشيخ العلامة محمد بن صالح بن عثيمين
மொழிபெயர்ப்பு: ஹுஸைன் இப்னு றபீக் மதனி
தயாரிப்பு:
– ஸுன்னஹ் அகாடமி
கீழே உள்ள Link-களின் மேலே Click செய்து ஸுன்னஹ் அகாடமியின் சமுக வலைதளங்களில் இணைந்து கொள்ளுங்கள்.
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp
Telegram:
t.me/sunnah_academy
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academy
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: