வீட்டிற்கு வெளியே (வேளை) பணிபுரியும் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்
கேள்வி:
நான் இருபது வயதுடைய பொறியியல் படிக்கும் மாணவி. என்னுடைய கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக கோடை காலத்தில் ஸ்டேஷனரி கடைக்கு வேலைக்கு செல்கிறேன். இதில் எதுவும் தவறு உள்ளதா? நான் நிகாப் அணிந்துள்ளேன்.
விடை-
ஒரு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும், தேவையான காரணங்களை தவிர வெளியே செல்லக்கூடாது இதுவே அடிப்படை கொள்கையாகும் ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்
மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள்.
(அல்குர்ஆன் : 33:33)
இது பொதுவாக, நபி ﷺ மனைவிகளுக்கு கூறப்பட்டாலும், முஃமினான பெண்களுக்கும் பொருந்தும். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மரியாதை மற்றும் அந்தஸ்து காரணமாக இது நபியின் மனைவிகளுக்கு மட்டுமே உரையாற்றப்படுகிறது. ஏனெனில் அவர்கள் முஃமினான பெண்களே..
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்
பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான். அவள் தன் வீட்டில் தங்கியிருப்பதை விட அல்லாஹ்வுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பதில்லை.
இப்னு குஸைமா-1685 , 1686 , 1687 , இப்னு ஹிப்பான்-5598 , 5599
இமாம் நாசிரூதீன் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று தனது நூல் “ஸில்ஸிலாத்து ஸஹீஹா-2688” பதிவு செய்துள்ளார்கள்.
நபி ﷺ அவர்கள், பள்ளிவாசலில் பெண்கள் தொழுகையை நிரைவேற்றுவதை பற்றி கூறும் போது “அவர்களுக்கு அவர்களது வீட்டில் நிறைவேற்றுவது சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
சுனன் அபூதாவூத்-567
இமாம் நாசிரூதீன் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று தனது நூல் “ஸஹீஹ் சுனன் அபூதாவூத்” பதிவு செய்துள்ளார்கள்.
இரண்டாவது-
ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்வது அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதில் சில நிபந்தனைகளை உள்ளது. அவர்கள் அதை சந்திக்கும் போது அவர்கள் வேலைக்கு வெளியே செல்வது அனுமதிக்கப்பட்டது
-உங்கள் விஷயத்தைப் போலவே அவளுக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கு அவர்கள் வேலை செய்ய வேண்டும்.
-மருத்துவம், செவிலியர், கற்பித்தல், தையல் போன்றவற்றில் பெண்களின் இயல்புக்கு ஏற்றவாறு வேலை இருக்க வேண்டும்
-வேலைக்கு பெண்கள் மட்டுமே இருக்கும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும்
மஹ்ரம் அல்லாத ஆண்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது.
-அவர்கள் வேலையில் இருக்கும் போது ஷரியத் கூறும் முழுமையான ஹிஜாப்பை அவர்கள் பேண வேண்டும்.
-வேலைக்காக பயணிக்கும் போது மஹரமில்லாத ஆண்கள் இன்றி செல்ல கூடாது.
– அவர்கள் வேலைக்கு செல்லும் போது மஹர்ரமான(அனுமதிக்கப்பட்ட) ஆண்கள் இன்று பயணத்திற்கு செல்ல கூடாது.
-அவர்கள் வேலைக்காக வெளியே செல்லும் போது டிரைவருடன் தனியாக இருப்பது, மஹரமில்லாத (அனுமதிக்கப்படாத) ஆண்கள் வாசனையை உணரும் வகையில் வாசனை திரவியங்களை பயண்படுத்துவது போன்ற எந்த ஹராமான செயலையும் செய்யக்கூடாது.
-அவர்கள் தன் வீடு, கணவன், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போன்ற அவர்களுக்கு மிகவும் அவசியமான விஷயங்களை அவர்கள் புறக்கணித்துவிட்டு வேலைக்கு செல்ல கூடாது.
நிர்வாகத்திலோ, தொழில்நுட்ப உதவியிலோ, பெண்களுக்குத் தையல் தைக்கும் தொழிலில் பணிபுரிந்தல், பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற பெண்கள் துறை சார்ந்த விசயத்தில் மட்டுமே ஒரு பெண் பணியாற்ற வேண்டும். ஆண்களுக்கான துறைகளில் அவர்கள் பணிபுரிவதைப் பொறுத்தவரை, இது அவளுக்கு தடைசெய்யப்பட்டது. ஏனெனில் அவர்கள் ஆண்களுடன் சேர்ந்து இருப்பது போன்ற பெரிய பித்னா(சோதனை மற்றும் குழப்பத்தை) ஏற்படுத்தும். மேலும் இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் பின்வரும் நபி ﷺ அவர்களின் நபிமொழிகளில் கூறிப்பிடபட்டள்ளது
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்” (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை. (ஸஹீஹ் புகாரி : 5096.) பனு இஸ்ரவேல்களுக்கு ஏற்பட்ட முதல் சோதனையே பெண்களால் தான்-(ரியாலுஸ் ஸாலிஹீன்-70. அதனால் மனிதன் தனது குடும்பத்தை பித்னா (சோதனைகளில்) இடத்தில் இருந்தும் அதன் சூழ்நிலையில் இருந்தும் விலக்கி வைக்க வேண்டும் என்று இமாம் முஹம்மத் ஸாலிஹ் இப்னு உஃஸைமீன்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்
ஃபத்வா மரஹ் அல் முஸ்லிம்மாஹ்-(2/981)
இதுபோன்ற நடைமுறையில் வேலை பார்ப்பதாக இருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் உங்களுக்கு ஸாலிஹான கணவனை வழங்குவானாக. ஏனெனில் அவரால் அதை செய்ய இயலும்
அல்லாஹ் மிக அறிந்தவன்.
Source: Islamqa
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: