பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
கேள்வி :
வஸனிய்யத் என்ற வார்த்தையின் நோக்கம் என்ன? இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா?
பதில் :
அல்ஹம்துலில்லாஹ் இதன் நோக்கம் சிலைவணக்கம் மற்றும் அதோடு தொடர்பில் இருப்பது ஆகும். இந்த வார்த்தை சிலை வணக்கம் புரியும் அரபிய இணை கற்பிப்பாளர்கள், இந்தியாவில் உள்ளோர், ஜப்பான் போன்ற நாடுகளை சுட்டிகாட்டுகிறது. இது யூத கிரிஸ்தவ வேதக்காரர்களை குறிக்காது.
குர்ஆனிலும் சுன்னாவிலும் சிலை வணக்கத்தை தடுத்து அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்று ஆயத்துகள் ஹதீஸ்கள் வந்திருக்கிறது.
இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) அல்லாஹ் புனிதமாக்கியவற்றைக் கண்ணியப் படுத்துவோருக்கு அது இறைவனிடம் அவருக்குச் சிறந்தது. உங்களுக்குக் கூறப்படவுள்ளவற்றைத் தவிர ஏனைய கால் நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!
-சூரா ஹஜ் 30
அசுத்தத்தை வெறுப்பீராக!
-சூரா முதஸ்ஸிர் 5
அபூஸலமா அவர்கள் கூறுகிறார்கள் இவ்வசனத்தில் இடம் பெறும் ரிஜ்ஸ் என்ற வார்த்தை சிலையை குறிக்கும் இதை இமாம் புகாரி ரஹ் அவர்கள் தன்னுடைய ஸஹீஹீல் புகாரி தப்ஸீர் பாடத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
“அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கே அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று இப்ராஹீம் தமது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவ னுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!-சூரா அன்கபூத் 16,17
இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில் உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.
-சூரா அன்கபூத் 25
இமாம் புகாரி ரஹ் அவர்கள் ஹிர்கல் மன்னர் அபூசுப்யான் ரலி அவர்களிடம் உரையாடிய சம்பவத்தை பதிவு செய்துள்ளார்கள்.
“அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்?” என்று கேட்டார். நான் “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும்/ எவரையும் இணை யாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளை யெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். சிலைவணக்கம் செய்வதை விட்டும் தடுக்கிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், “ஸகாத்’ கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடகின்றார்” என்று சொன்னேன்.
நூல் : புகாரி 7
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்:
ஒரு முறை அல்லாஹ் பூமி முழுவதையும் எனக்காக திரட்டிக்காட்டினான். அப்போது பூமியின் கிழக்கு பகுதிகளையும் மேற்குப்பகுதிகளையும் நான் பார்த்தேன். எனக்கு காட்டப்பட்ட பகுதிகள் வரை என் சமுதாயத்தவரின் ஆட்சி விரிவடையும் மேலும் சிவப்பு மற்றும் வெள்ளி இரண்டு கருஊலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. … என்னுடைய சமுகத்தாரில் ஒரு கூட்டம் இணைவைப்பளர்களோடு இணைந்துவிடுவார்கள். மேலும் என்னுடைய சமுகத்தாரில் சிலர் சிலைகளை வணங்குவார்கள்.
நூல் : அபூதாவுத் 4252 திர்மிதி 2219
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் துல்கலஸா சிலையை சுற்றி அசையாத வரை மறுமைநாள் வராது. அறியாமைக்காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டுவந்த ஒரு சிலையாகும்.
நூல் : புகாரி 7116
வஸனிய்யத் என்பது சிலை வணக்கத்தை குறிக்கும். அது அரேபிய தீபகற்பத்தில் பரவி இருந்தது. அது இப்போது இந்தியா ஜப்பான் ஆப்ரிக்காவின் சில நாடுடகள் போன்றவற்றில் உள்ளது.
இந்த செய்தியில் சிலை மீண்டும் கியாம நாளுக்கு முன்பு இறுதிக்காலத்தில் அரேபிய தீபகற்பத்தை நோக்கி திரும்பும் என்று உள்ளது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
மூலம்:islamqa.info
மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர் )
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: